Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
ருசியான மற்றும் காரசாரமான... சில்லி ராஜ்மா
தற்போது குளிர்காலம் என்பதால் பலரும் சற்று காரசாரமாக சாப்பிட விரும்புவதுண்டு. அத்தகையவர்கள் சில்லி ராஜ்மா செய்து சாப்பிடலாம். இந்த சில்லி ராஜ்மா சாதம், சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தினமும் என்ன சமைப்பது என்று தெரியாமல் புலம்புகிறீர்களா? உங்கள் வீட்டில் ராஜ்மா உள்ளதா? அப்படியானால் அந்த ராஜ்மாவைக் கொண்டு ஒரு சுவையான சைடு டிஷ் செய்யுங்கள். அதுவும் தற்போது குளிர்காலம் என்பதால் பலரும் சற்று காரசாரமாக சாப்பிட விரும்புவதுண்டு. அத்தகையவர்கள் சில்லி ராஜ்மா செய்து சாப்பிடலாம். இந்த சில்லி ராஜ்மா சாதம், சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த சில்லி ராஜ்மா செய்வது மிகவும் சுலபம். ஆனால் ராஜ்மாவை சமைக்க வேண்டுமானால், அதை குறைந்தது 7-8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

உங்களுக்கு சில்லி ராஜ்மா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில்லி ராஜ்மாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ராஜ்மா - 1 கப்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
* கொத்தமல்லி - ஒரு கையளவு (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ராஜ்மாவை நீரில் 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் குக்கரில் ஊற வைத்த ராஜ்மாவை போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 7-8 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து ராஜ்மாவை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சீரகத் தூள் சேர்த்து கிளறி, சிறிது நீரை ஊற்றி 1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் வேக வைத்த ராஜ்மாவை சேர்த்து கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான சில்லி ராஜ்மா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
