Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
சில்லி பன்னீர் கிரேவி
நீங்கள் உங்கள் வீட்டில் அடிக்கடி ஃப்ரைடு ரைஸ் செய்வீர்களா? அதற்கு என்றாவது சைடு டிஷ் செய்ததுண்டா? இல்லையெனில் இன்று உங்கள் வீட்டில் ஃப்ரைடு ரைஸ் செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக சில்லி பன்னீர் கிரேவி செய்யுங்கள்.
நீங்கள் உங்கள் வீட்டில் அடிக்கடி ஃப்ரைடு ரைஸ் செய்வீர்களா? அதற்கு என்றாவது சைடு டிஷ் செய்ததுண்டா? இல்லையெனில் இன்று உங்கள் வீட்டில் ஃப்ரைடு ரைஸ் செய்து, அதற்கு சைடு டிஷ்ஷாக சில்லி பன்னீர் கிரேவி செய்யுங்கள். இது அற்புதமான காம்பினேஷனாக இருக்கும். அதுவும் ஃப்ரைடு ரைஸ் பிடிக்காதவர்களுக்கு, சில்லி பன்னீர் கிரேவியுடன் சேர்த்து கொடுத்தால், அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள். வேண்டுமானால், சில்லி பன்னீரை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம்.

உங்களுக்கு சில்லி பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில்லி பன்னீர் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 3/4 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கியது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 5 பல் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* சோயா சாஸ் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியனின் வெள்ளைப் பகுதி - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* ஸ்பிரிங் ஆனியனின் பச்சை பகுதி - 1/2 டேபின் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1 கப்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
ஊற வைப்பதற்கு...
* மைதா - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - பேஸ்ட் செய்ய தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை எடுத்து ஓரளவு கெட்டியான பேட் போல் கலந்து, பன்னீர் துண்டுகளைப் போட்டு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் இன்னும் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரிங் ஆனியனின வெள்ளைப் பகுதி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சோயா சாஸ், தக்காளி சாஸ், சில்லி சாஸ், மிளகுத் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி, ஒரு கப் நீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு அதில் எஞ்சியுள்ள மைதா சோள மாவு பேஸ்ட் சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து, கிரேவி ஓரளவு கெட்டியாக ஆரம்பித்ததும், அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு கிளறி, மேலே பிரிங் ஆனியனின் பச்சை பகுதியைத் தூவி இறக்கினால், சுவையான சில்லி பன்னீர் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications