Latest Updates
-
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது!
சில்லி மீல் மேக்கர்
உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளோரும் மீல் மேக்கரை விரும்பி சாப்பிடுவீர்களா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்யுங்கள். அது தான் சில்லி மீல் மேக்கர்.
குளிர்காலத்தில் நன்கு வாய் ருசியாக சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதுவும் மாலை வேளையில் பலக்கும் சூடாக எதையாவது சாப்பிட ஆசை எழும். உங்கள் வீட்டில் மீல் மேக்கர் உள்ளதா? நீங்களும் உங்கள் வீட்டில் உள்ளோரும் மீல் மேக்கரை விரும்பி சாப்பிடுவீர்களா? அப்படியானால் அந்த மீல் மேக்கரைக் கொண்டு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்யுங்கள். அது தான் சில்லி மீல் மேக்கர். இது ருசியாக இருப்பதோடு, பசியையும் தணிக்கும். மேலும் இதை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுத்தால், அவர்களின் பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு சில்லி மீல் மேக்கர் எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில்லி மீல் மேக்கர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* வினிகர் - 2 டீஸ்பூன்
* க்ரீன் சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 2 டேபிள் ஸ்பூன்
* ரெட் சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
ஊற வைப்பதற்கு...
* மீல் மேக்கர் - 3 கப் (வேக வைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் நீரில் போட்டு, 10 நிமிடம் ஊற வைத்து, பின் அதை குளிர்ந்த நீரில் ஒருமுறை அலசி, அதிகப்படியான நீரைப் பிழிந்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் மீல் மேக்கரைப் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், சோள மாவு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மீல் மேக்கரைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் வாணலியில் உள்ள மீதமுள்ள எண்ணெயில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் குடைமிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் சர்க்கரை, உப்பு மற்றும் அனைத்து வகையான சாஸ்களையும் சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் பொரித்த மீல் மேக்கரை சேர்த்து, சாஸ் உடன் நன்கு கிளறி விட்டு, 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான சில்லி மீல் மேக்கர் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
