Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
சில்லி பேபி கார்ன்
உங்கள் குழந்தைகள் பேபி கார்னை விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் சில்லி பேபி கார்ன் ரொம்ப பிடிக்குமா? அவர்களுக்கு இதுவரை கடைகளில் தான் சில்லி பேபி கார்னை வாங்கி கொடுத்திருக்கிறீர்களா? இனிமேல் அதை வீட்டிலேயே செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகள் பேபி கார்னை விரும்பி சாப்பிடுவார்களா? அதுவும் சில்லி பேபி கார்ன் ரொம்ப பிடிக்குமா? அவர்களுக்கு இதுவரை கடைகளில் தான் சில்லி பேபி கார்னை வாங்கி கொடுத்திருக்கிறீர்களா? அப்படியானால் இனிமேல் அதை வீட்டிலேயே செய்து கொடுங்கள். இந்த சில்லி பேபி கார்ன் செய்வது மிகவும் சுலபம். அதோடு இது ஒரு சுவையான ஸ்நாக்ஸ் கூட.

உங்களுக்கு சில்லி பேபி கார்ன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில்லி பேபி கார்ன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மாவு தயாரிப்பதற்கு...
* பேபி கார்ன் - 15
* சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* மைதா - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
பிற பொருட்கள்...
* ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1/4 கப் (நீளமாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* ஸ்பிரிங் ஆனியன் வெள்ளைப் பகுதி - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* ஸ்பிரிங் ஆனியன் பச்சை பகுதி - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் - 1/4 கப் (நீளமாக நறுக்கியது)
* பூண்டு - 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* சோயா சாஸ் - 1/4 டீஸ்பூன்
* சில்லி சாஸ் - 1/2 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் இறக்கி, பேபி கார்னை சேர்த்து 5 நிமிடம் அப்படியே ஊற வைக்க வேண்டும். பின் அதை எடுத்து சிறு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் சோள மாவு, மைதா, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பேபி கார்ன் துண்டுகளை மைதா பேஸ்ட்டில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய், பூண்டு, ஸ்பிரிங் ஆனியன் வெள்ளைப் பகுதி சேர்த்து 2 நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அதன் பின் குடைமிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் பொரித்த பேபி கார்னை சேர்த்து, அத்துடன் தக்காளி சாஸ், சில்லி சாஸ், சோயா சாஸ் மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி, அதன் பின் ஸ்பிரிங் ஆனியனின் பச்சை பகுதியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான சில்லி பேபி கார்ன் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
