Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி வெள்ளை சால்னா செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்...
Chicken Vella Salna Recipe In Tamil: இந்த வார விடுமுறை நாளில் சிக்கன் வாங்கப் போகிறீர்களா? அதுவும் எப்போதும் சிக்கனை ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் சிக்கன் வெள்ளை சால்னாவை செய்யுங்கள். இந்த சால்னா இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, இடியாப்பம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் சால்னா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.
சொல்லப்போனால் வழக்கமாக செய்யும் சிக்கன் சைடு டிஷ்ஷை விட மிகவும் வேகமாக செய்து விடலாம். அந்த அளவில் இது சுலபமான செய்முறையைக் கொண்டது. பேச்சுலர்கள் கூட இந்த சால்னாவை செய்யலாம். ஒருமுறை இந்த சால்னாவை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், இதன் சுவைக்கு அடிமையாகி அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு சிக்கன் வெள்ளை சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் வெள்ளை சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 10
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 5 பல்
* பச்சை மிளகாய் - 4
* பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
* முந்திரி - 6
* கசகசா - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* தேங்காய் - 1/2 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* புதினா - 1 கைப்பிடி
* சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை
மிளகாய், பொட்டுக்கடலை, முந்திரி, கசகசாவை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் 1/2
கப் தேங்காய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 கைப்பிடி புதினாவை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 1/2 கிலோ சிக்கனை நீரில் நன்கு கழுவிவிட்டு சேர்த்து, 2
நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சிக்கனை நன்கு கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி,
2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி
கிளறினால், சுவையான சிக்கன் வெள்ளை சால்னா தயார்.



Click it and Unblock the Notifications