அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி வெள்ளை சால்னா செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்...

Posted By:

Chicken Vella Salna Recipe In Tamil: இந்த வார விடுமுறை நாளில் சிக்கன் வாங்கப் போகிறீர்களா? அதுவும் எப்போதும் சிக்கனை ஒரே மாதிரி செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக சமைத்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் சிக்கன் வெள்ளை சால்னாவை செய்யுங்கள். இந்த சால்னா இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, இடியாப்பம் என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த சிக்கன் சால்னா செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும்.

சொல்லப்போனால் வழக்கமாக செய்யும் சிக்கன் சைடு டிஷ்ஷை விட மிகவும் வேகமாக செய்து விடலாம். அந்த அளவில் இது சுலபமான செய்முறையைக் கொண்டது. பேச்சுலர்கள் கூட இந்த சால்னாவை செய்யலாம். ஒருமுறை இந்த சால்னாவை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்தால், இதன் சுவைக்கு அடிமையாகி அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

Chicken Vella Salna How To Make a Chicken White Salna Recipe

உங்களுக்கு சிக்கன் வெள்ளை சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் வெள்ளை சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* சின்ன வெங்காயம் - 10
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 5 பல்
* பச்சை மிளகாய் - 4
* பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
* முந்திரி - 6
* கசகசா - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* தேங்காய் - 1/2 கப்

தாளிப்பதற்கு...

* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* புதினா - 1 கைப்பிடி
* சிக்கன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 2 கப்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை:

* முதலில் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, முந்திரி, கசகசாவை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் மிளகு, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் 1/2 கப் தேங்காய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் 1 கைப்பிடி புதினாவை சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 1/2 கிலோ சிக்கனை நீரில் நன்கு கழுவிவிட்டு சேர்த்து, 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சிக்கனை நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் மசாலாவை சேர்த்து கிளறி, 2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான சிக்கன் வெள்ளை சால்னா தயார்.

[ of 5 - Users]
Story first published: Sunday, June 1, 2025, 7:15 [IST]
Desktop Bottom Promotion