Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்காம.. சிம்பிளா.. எப்படி சிக்கன் வறுவல் செய்யணும் தெரியுமா?
No Onion No Tomato Chicken Varuval Recipe In Tamil: விடுமுறை நாட்களில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வாய்க்கு ருசியாகவும், அதே சமயம் நீண்ட நேரம் சமையலறையில் இல்லாமல் சிம்பிளாக ஒரு சிக்கன் ரெசிபி செய்ய நினைத்தால், சிக்கன் வறுவல் செய்யுங்கள்.
அதுவும் வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்காமல் சிக்கன் வறுவலை செய்து கொடுங்கள். சுக்கா அளவில் சிக்கன் வறுவல் செம ருசியாக இருக்கும். இந்த சிக்கன் வறுவல் பேச்சுலர்களுக்கும், புதிதாக சமையலை தொடங்கியவர்களுக்கும் ஏற்றதாக இருக்கும். ஏனெனில் இந்த ரெசிபிக்கு வெறும் மசாலா பொடிகள் இருந்தாலே போதும்.

உங்களுக்கு வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்காமல் சிக்கன் வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்காமல் செய்யக்கூடிய சிக்கன் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 1
* பிரியாணி இலை - 1
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சிக்கன் 1/2 கிலோ
* காஷ்மீரி மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, சோம்பு சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* அடுத்து அதில் சிக்கனை கழுவி சேர்த்து 3 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் காஷ்மீரி மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா,
இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு 2-3
நிமிடம் மிதமான தீயில் வைத்து பிரட்டி விட வேண்டும்.
* பிறகு அதில் 1 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 10 நிமிடம்
சிக்கனை வேக வைக்க வேண்டும். முக்கியமாக அவ்வப்போது மூடியைத் திறந்து
கிளறி விட வேண்டும்.
* சிக்கனில் உள்ள நீர் ஓரளவு வற்றி, எண்ணெய் மேலே மிதக்க
தொடங்கியதும், கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான தக்காளி
வெங்காயம் சேர்க்காத சிக்கன் வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications