Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
கல்யாண வீட்டு சிக்கன் உப்புக்கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க..
Chicken Uppu Kari Recipe In Tamil: இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டில் சிக்கன் எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் சிக்கனை எப்போதும் ஒரே சுவையில் செய்து சாப்பிடாமல், ஒருமுறை கல்யாண வீட்டு சிக்கன் உப்புக்கறியை செய்து சாப்பிடுங்கள்.
இந்த சிக்கன் உப்புக்கறி ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். ஏன் வெள்ளை சாதத்துடன் சேர்த்து பிசைந்து கூட சாப்பிடலாம். ஒருமுறை இப்படியொரு சிக்கன் சைடு டிஷ் செய்தால், பின்அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள்.

உங்களுக்கு சிக்கன் உப்புக்கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் உப்புக்கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்ற எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பொடி செய்வதற்கு...
* சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பூண்டு - 7 பல்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* விதைகளை நீக்கிய வரமிளகாய் - 10
* வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* அரைத்த பூண்டு
* சிக்கன் - 3/4 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சுடுநீர் - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் சீரகம், சோம்பு, மிளகு, வரமிளகாய்
ஆகியவற்றை சேர்த்து நன்கு பொடித்து, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின் அதே ஜாரில் 7 பூண்டு பற்களை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் விதைகளை நீக்கி வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்த பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, 1/4 டீஸ்பூன் மஞ்சள்
தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு, நீர்
விட்டு வரும் வரை வதக்க வேண்டும்.
* சிக்கனில் இருந்து நீர்விட்டு வந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள
பொடியை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் நன்கு வேக வைக்க
வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து சிக்கனை நன்கு கிளறி, சிக்கன் அடிப்பிடிப்பது
போன்று இருந்தால், சிறிது சுடுநீரை தெளித்து கிளறி, மூடி வைத்து,
மீண்டும் 5 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான கல்யாண வீட்டு சிக்கன் உப்புக்கறி தயார்.



Click it and Unblock the Notifications











