Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சப்பாத்தி, பூரிக்கு ஒருடைம் சிக்கனை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
Chicken Tikka Gravy Recipe In Tamil: இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பூரி செய்ய போகிறீர்களா? அதற்கு சிக்கன் வாங்கி கிரேவி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் வழக்கமாக செய்யும் சிக்கன் கிரேவியை செய்யாமல், ஒருமுறை சிக்கன் டிக்கா கிரேவியை செய்யுங்கள்.
இந்த சிக்கன் டிக்கா கிரேவி சப்பாத்தி, பூரி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக ஒருமுறை இந்த கிரேவியை செய்தால், பின் எப்போதும் இப்படி தான் கிரேவியை செய்வீர்கள்.

உங்களுக்கு சிக்கன் டிக்கா கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் டிக்கா கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
* புளிக்காத கெட்டி தயிர் - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
கிரேவிக்கு...
* எண்ணெய் - 1/4 கப்
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 3 (அரைத்தது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* கசூரி மெத்திரி - 1 டீஸ்பூன்
* சுடுதண்ணீர் - தேவையான அளவு
* பிரஷ் க்ரீம் - 3/4 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சிக்கனுடன் புளிக்காத கெட்டித் தயிர், மஞ்சள் தூள்,
மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், காஷ்மீரி மிளகாய் தூள்,
கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
1 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கைகளால் நன்கு பிசைந்து விட்டு, மூடி
வைத்து, 30 நிமிடம் ஃப்ரிட்ஜ்ஜில் ஊற வைக்க வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து, ஃப்ரிட்ஜ்ஜில் இருந்து சிக்கனை வெளியே எடுக்க
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு, சிக்கனை முக்கால்வாசி வேக
வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிக்கன் ப்ரை செய்து
மீந்து போன எண்ணெயை ஊற்றி, அத்துடன் வெண்ணெயையும் சேர்த்து உருக வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை ஊற்றி நன்கு பச்சை வாசனை போக வாக்க
வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், சீரகத் தூள்,
காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு,
சர்க்கரை மற்றும் கசூரி மெத்தியையும் சேர்த்து கிளறி, எண்ணெய்
பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் ப்ரை செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி
விட்டு, பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு சுடுநீரை ஊற்றி கிளறி,
மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து சிக்கனை வேக வைக்க
வேண்டும்.
* இறுதியாக அதில் பிரஷ் க்ரீம்மை சேர்த்து கிளறி, 5 நிமிடம் கொதிக்க
வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சிக்கன் டிக்கா கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications