Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
மொறுமொறுப்பான... சிக்கன் ஸ்ட்ரிப்ஸ்
இந்த புத்தாண்டு அன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுப்பதாக இருந்தால், சிக்கன் 65 மட்டும் செய்யாமல், சிக்கன் ஸ்ட்ரிப்ஸ் செய்து சாப்பிடுங்கள். இது இன்னமும் அற்புதமாக இருக்கும்.
நம்மில் பெரும்பாலானோர் விடுமுறை நாட்களில் வீட்டில் நன்கு வாய்க்கு ருசியாக சமைத்து சாப்பிட்டு, ஓய்வெடுக்கவே விரும்புவோம். முக்கியமாக அசைவ உணவுகளை பலவாறு சமைத்து சாப்பிடுவோம். அதுவும் புத்தாண்டு தினமானது ஞாயிற்றுக்கிழமை வருவதால் பலருக்கும் இன்னும் சந்தோஷமாக இருக்கும். ஏனெனில் ஞாயிற்று கிழமைகளில் தான் அனைவரது வீட்டிலும் நல்ல காரசாரமாக மற்றும் மணமணக்கும் வகையில் பல சுவையான அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவோம். அப்படியிருக்க இந்த புத்தாண்டு அன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுப்பதாக இருந்தால், சிக்கன் 65 மட்டும் செய்யாமல், சிக்கன் ஸ்ட்ரிப்ஸ் செய்து சாப்பிடுங்கள். இது இன்னமும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் ஸ்ட்ரிப்ஸ் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் ஸ்ட்ரிப்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் நெஞ்சுக்கறி - 2 பெரிய துண்டு
* மைதா - 1 கப்
* சோள மாவு - 1/2 கப்
* பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கார்ன் ப்ளேக்ஸ் - 2 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கார்ன் ப்ளேக்ஸை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சிக்கனை நீளத் துண்டுகளாக வெட்டி, நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பௌலில் மைதா, சோள மாவு, பேக்கிங் பவுடர், உப்பு, மிளகுத் தூள் சேர்த்து, நீரை ஊற்றி ஓரளவு நீராக கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், ஒரு சிக்கன் துண்டை எடுத்து, முதலில் மாவில் பிரட்டி, பின் கார்ன் ப்ளேக்ஸில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து சிக்கன் துண்டுகளையும் பொரித்து எடுத்தால், சுவையான சிக்கன் ஸ்ட்ரிப்ஸ் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
