Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
சிக்கனை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் சிக்கன் புளிக்கறியா செய்யுங்க... சாதம், சப்பாத்திக்கு செம சைடிஷா இருக்கும்!
Chicken Pulikari Recipe in Tamil: உங்கள் வீட்டில் இந்த வாரம் சிக்கன் எடுக்க திட்டமிட்டுள்ளீர்களா? காலையில் இட்லி, தோசைக்கு அல்லது பூரிக்கு சிக்கன் கிரேவியை சைடிஷா செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் ஒருமுறை சிக்கன் கிரேவியை இந்த பக்குவத்தில் சிக்கன் புளிக்கறியாக செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் கிரேவி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். இந்த சூப்பரான சிக்கன் புளிக்கறி கேரளாவில் மிகவும் பிரபலமானதாகும்.
இந்த சிக்கன் புளிக்கறி சமைப்பதற்கு மிகவும் எளிதாகவும், புளிப்பு, காரம் என தனித்துவமான சுவையுடனும் சாப்பிட அருமையாக இருக்கும். தற்போது வானிலை மிகவும் குளிராக இருப்பதால் சிக்கனை நன்கு காரசாரமாக சமைத்து சாப்பிட நினைத்தால், இந்த சிக்கன் புளிக்கறியை செய்து சாப்பிடலாம். இப்படி செய்யும் போது சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும் மற்றும் காரசாரமாக இருப்பதால் சளி பிடித்திருந்தால், அதிலிருந்து கொஞ்சம் நிவாரணமும் கிடைக்கும்.

உங்களுக்கு கேரளா ஸ்டைல் சிக்கன் புளிக்கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரளா ஸ்டைல் சிக்கன் புளிக்கறியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- சிக்கன் - ½ கிலோ
- நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
- நறுக்கிய தக்காளி - 1
- இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- மஞ்சள்தூள் - ½ டீஸ்பூன்
- மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
- மிளகு தூள் - ½ டீஸ்பூன்
- சீரக தூள் - ½ டீஸ்பூன்
- கரம் மசாலா - ½ டீஸ்பூன்
- புளிக்கரைசல் - கால் கப்
- கறிவேப்பிலை - 12 கொத்து
- கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
வறுத்து அரைக்க:
- சோம்பு - 1 டீஸ்பூன்
- மிளகு - ½ டீஸ்பூன்
- சீரகம் - ½ டீஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 10
- பூண்டு பல் - 5
- கசகசா - 1 டீஸ்பூன் கசகசா
- துருவிய தேங்காய் - 2 ஸ்பூன்
செய்முறை:
- முதலில் வறுத்து அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடு செய்து கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக குழையும் வரை வதக்கவும்.
- தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும்.
- பின்னர் சிக்கன் சேர்த்து 5 நிமிடம் கிளறி வதக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும்.
- பின்னர் 10-12 நிமிடம் மூடி வைத்து வேக விடவும், இடையிடையே திறந்து கிளறி விடவும்.
- சிக்கன் முக்கால் வாசி வெந்ததும் புளி நீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- பின்னர் வறுத்து அரைத்த மசாலா சேர்த்து மீண்டும் 10-15 நிமிடம் கிரேவி கெட்டியாக வரும் வரை மிதமான தீயில் மெதுவாக சமைக்கவும்.
- இறுதியில் மிளகு தூள், சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தூவி 2 நிமிடம் கழித்து இறக்கினால் சுவையான சிக்கன் புளிக்கறி ரெடி!



Click it and Unblock the Notifications











