Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க..
மழை நேரத்துல இப்படி ஒருடைம் சிக்கன் மிளகு ரசம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசி சும்மா வேற லெவல்-ல இருக்கும்..
Chicken Milagu Rasam Recipe In Tamil: தற்போது ஆங்காங்கு மழை பெய்து, காலநிலை மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. இதனால் நிறைய பேர் சளி தொல்லையால் அவதிப்படலாம். உங்கள் வீட்டில் உள்ளோரும் அப்படி சளிப்பிடித்து சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்களா?
அப்படியானால் அவர்களுக்கு சிக்கன் மிளகு ரசம் செய்து கொடுங்கள். இது இந்த மழை நேரத்தில் இதமாக இருப்பதோடு, சளியில் இருந்தும் நல்ல நிவாரணம் கிடைக்கும். நல்ல சூடான சாதத்துடன் சிக்கன் மிளகு ரசத்தை மட்டும் செய்து சாப்பிட்டால், சுவை வேற லெவலில் இருக்கும். முக்கியமாக இந்த ரசம் செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு சிக்கன் மிளகு ரசம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் மிளகு ரசம் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ரசப் பவுடருக்கு...
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 5-6
தக்காளி அரைப்பதற்கு..
* கனிந்த தக்காளி - 3
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
ரசத்திற்கு...
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பூண்டு - 7-8 பல்
* வரமிளகாய் - 1
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 2 கொத்து
* சிக்கன் - 250 கிராம்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளிச்சாறு - 1/2 கப்
* தண்ணீர் - 3 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, மிளகு, சீரகம், மல்லி,
கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர்
ஜாரில் போட்டு அரைத்து பொடித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில், தக்காளியை துண்டுகளாக்கி சேர்த்து,
அத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு, வரமிளகாய் சேர்த்து வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள்,
சுவைக்கேற்ப உப்பு மற்றும் வறுத்து அரைத்து வைத்துள்ள ரசப் பொடியையும்
சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுது மற்றும்
புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, 3 கப் நீரை ஊற்றி கொதி வந்ததும், மூடி
வைத்து 10 நிமிடம் குறைவான தீயில் வைத்து சிக்கனை நன்கு வேக வைக்க
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி
இறக்கினால், சுவையான சிக்கன் மிளகு ரசம் தயார்.



Click it and Unblock the Notifications