Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
சிக்கனை ஒருமுறை இப்படி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Chicken Milagai Pirattal Recipe In Tamil: வார இறுதி வந்தாலே வீட்டில் சிக்கனை வாங்கி பலவிதமாக சமைத்து சாப்பிடுவீர்களா? முக்கியமாக உங்களுக்கு புதுவிதமான ரெசிபிக்களை செய்து சாப்பிட ஆர்வம் அதிகம் உள்ளதா? இதனால் அடிக்கடி வீட்டில் புதிதாக ஏதாவது செய்வீர்களா? இந்த வாரம் புதிதாக என்ன சிக்கன் செய்வதென்று தெரியவில்லையா?
அப்படியானால் சிக்கன் மிளகாய் பிரட்டலை செய்யுங்கள். இந்த சிக்கன் மிளகாய் பிரட்டல், செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மிகவும் சுவையாகவும் இருக்கும். மேலும் இப்படி சிக்கனை செய்தால், சாம்பார் சாதம், ரசம் சாத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

உங்களுக்கு சிக்கன் மிளகாய் பிரட்டலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் மிளகாய் பிரட்டல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்ற எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் - 1/2 கிலோ
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 25
* வரமிளகாய் - 10
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் சின்ன வெங்காயம் மற்றும் வரமிளகாய் சேர்த்து
சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, கறிவேப்பிலை தூவி,
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள வெங்காயம் மற்றும் வரமிளகாய் விழுதை
சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் சிக்கனில் நீர் சேர்க்காமல், குறைவான தீயில் வைத்து, மூடி
வைத்து, சிக்கனை 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, சிக்கனை கிளறி இறக்கினால்,
சுவையான சிக்கன் மிளகாய் பிரட்டல் தயார்.



Click it and Unblock the Notifications