Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
லீவு நாளில் சிக்கனை ஒருவாட்டி இந்த பக்குவத்துல செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு சும்மா அள்ளும்...
Restaurant Style Chicken Masala Recipe In Tamil: லீவு நாட்களில் காலையில் இட்லி, பூரி, சப்பாத்தி என்று செய்வீர்களா? அதுவும் நாள் விடுமுறை நாளில் பூரி செய்வதாக இருந்தால், அதற்கு சைடுடிஷ்ஷாக சிக்கன் மசாலாவை செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று செய்யாமல், ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சிக்கன் மசாலா செய்யுங்கள்.
இப்படி செய்யும் போது வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவதோடு, அடிக்கடி இந்த சைடு டிஷ்ஷை செய்து கொடுக்குமாறும் கேட்பார்கள். அந்த அளவில் இது ருசியாக இருக்கும். இந்த மசாலாவை சப்பாத்தி பூரியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சிக்கன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* தக்காளி - 2
* முந்திரி - 10-15 (நீரில் 30 நிமிடம் ஊற வைத்தது)
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 100 மிலி
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அந்த சிக்கனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், தயிர்
மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 1/2
மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தக்காளி, ஊற வைத்த முந்திரி மற்றும் சிறிது
கொத்தமல்லியைத் தூவி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
சேர்த்து, பொன்னிறமாகும் வரை வாக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்ததை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து நன்கு
கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு 3-4 நிமிடம்
கிளறி விட வேண்டும். மசாலா அனைத்தும் சிக்கனுடன் சேர்ந்ததும், அதில்
நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, மூடி வைத்து
15-20 நிமிடம் மிதமான தீயில் வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, 2
நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவினா, சுவையான ரெஸ்டாரண்ட்
ஸ்டைல் சிக்கன் மசாலா தயார்.



Click it and Unblock the Notifications