Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
தக்காளி, தேங்காய் சேர்க்காம சிக்கனை இப்படி ஒருமுறை கிரேவி செஞ்சு பாருங்க.. வேற லெவல்-ல இருக்கும்...
Chicken Gravy Recipe In Tamil: விடுமுறை நாட்களில் உங்கள் வீட்டில் எப்போதும் அசைவ உணவுகளை விதவிதமாக சமைத்து சாப்பிடும் பழக்கம் உள்ளதா? இன்று உங்கள் வீட்டில் சிக்கனை எடுத்துள்ளீர்களா? அப்படியானால் அந்த சிக்கனை கிரேவி செய்வதாக இருந்தால், வழக்கமாக செய்யும் கிரேவி போன்று செய்யாமல், தக்காளி, தேங்காய் என்று எதுவுமே சேர்க்காமல் கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி சாதம், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.
உங்களுக்கு தக்காளி, தேங்காய் சேர்க்காமல் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி, தேங்காய் சேர்க்காமல் செய்யக்கூடிய சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 3/4 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை - 1/2
அரைப்பதற்கு..
* முந்திரி - 10
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமல்லி - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் -2 டீஸ்பூன்
கிரேவிக்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 3
* கிராம்பு - 4
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் உப்பு,
மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், பாதி எலுமிச்சையைப் பிழிந்து
சேர்த்து நன்கு பிசைந்து 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் முந்திரி, மிளகு, சீரகம், சோம்பு, வரமல்லி,
மிளகாய் தூள் சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு பொடி செய்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்னர் சிக்கனை சேர்த்து ஒரு 5 நிமிடம் நன்கு, சிக்கன் நிறம்
மாறும் வரை கிளறி விட வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 20
நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது,
அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* 20 நிமிடம் சிக்கன் வெந்ததும், அதில் மிளகுத் தூளை சேர்த்து கிளறி
இறக்கி, கொத்தமல்லியைத் தூவி மீண்டும் ஒருமுறை கிளறினால், சுவையான
சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications