Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
தக்காளி சேர்க்காம வெறும் 5-6 பொருட்களை வெச்சு..15 நிமிடத்தில் இப்படியொரு சிக்கன் கிரேவி செஞ்சு பாருங்க...
Chicken Gravy Recipe In Tamil: இன்று இரவு சப்பாத்திக்கு சிம்பிளா சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் சிக்கன் சைடு டிஷ் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் சிக்கனை வாங்கி வந்து, அத்துடன் 4-5 பொருட்களை மட்டும் சேர்த்து 15 நிமிடத்தில் கிரேவியை செய்யுங்கள்.
இந்த சிக்கன் கிரேவியை சமைக்கத் தெரியாதவர்கள் மற்றும் பேச்சுலர்கள் கூட செய்யலாம். அந்த அளவில் இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். முக்கியமாக அந்த சிக்கன் கிரேவிக்கு தக்காளியே தேவையில்லை. அதோடு இந்த சிக்கன் கிரேவி சப்பாத்தியுடன் மட்டுமின்றி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும்.

உங்களுக்கு 15 நிமிடத்தில் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே 15 நிமிடத்தில் செய்யக்கூடிய சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* சிக்கன் - 3/4 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* புளித்த தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து
நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அத்துடன் மஞ்சள் தூள்,
மிளகாய் தூள் மற்றும் சிக்கன் மசாலாவை சேர்தது நன்கு மசாலாவின் பச்சை
வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் புளித்த தயிரை சேர்த்து கிளறி, நீர் எதுவும்
ஊற்றாமல், மூடி வைத்து 10-15 நிமிடம் வேக வைத்து இறக்கி,
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications