Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
பூரிக்கு சிக்கன் கிரேவியை இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 பூரி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க..
Chicken Gravy For Poori: ஞாயிற்றுக்கிழமை வந்தாலே அனைவருக்கும் குஷியாக இருக்கும். ஏனெனில் இந்நாளில் தான் நமக்கு பிடித்ததை சமைத்து பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட முடியும். காலையில் உங்கள் வீட்டில் பூரி செய்யப் போகிறீர்களா? அந்த பூரிக்கு சிக்கன் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சிக்கன் கிரேவியை ஒரே மாதிரி செய்யாமல், ஒருமுறை இந்த பக்குவத்தில் செய்யுங்கள்.
இப்படி சிக்கன் கிரேவியை செய்யும் போது, சுவை பிரமாதமாக இருப்பதால், வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த ஸ்டைல் சிக்கன் கிரேவி சீக்கிரம் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். குறிப்பாக இது பேச்சுலர்களுக்கான சிம்பிளான ரெசிபி என்றே கூறலாம்.

உங்களுக்கு பூரிக்கு ஏற்ற சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1/2 கிலோ
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* புளிப்பில்லாத தயிர் - 3 ஸ்பூன்
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* புதினா - 1 கைப்பிடி
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கன் நன்கு நீரில் கழுவிவிட்டு, நீரை முற்றிலும்
வடித்துவிட வேண்டும்.
* பின் கழுவிய சிக்கனுடன் 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1/4
டீஸ்பூன் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு, 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்
தூள், 2 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள் மற்றும் புளிப்பில்லாத தயிர் 3
ஸ்பூன் சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் நறுக்கிய 2 வெங்காயம், 1 டீஸ்பூன் சீரகம்
மற்றும் 1 கைப்பிடி புதினாவை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், அரைத்த வெங்காய விழுதை சேர்த்து, பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு
சேர்த்து நன்கு 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி விட
வேண்டும்.
* பின் அதில் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, 2 நிமிடம்
மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, சிக்கனை கிளறி விட்டு, அதன் பின் மூடி
வைத்து மிதமான தீயில் வைத்து 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து, அதில் மிளகுத் தூள் மற்றும் கொத்தமல்லியைத்
தூவி கிளறி இறக்கினால், சுவையான சிக்கன் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications