Latest Updates
-
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க..
அடுத்தமுறை சிக்கனை இப்படி கிரேவி பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு சும்மா அள்ளும்..
Chicken Gravy For Idly Dosa Recipe In Tamil: ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் பலரது வீடுகளிலும் காலையில் இட்லி செய்து, மட்டன் அல்லது சிக்கன் குழம்பு செய்து வயிறு நிறைய சாப்பிட தோன்றும். உங்களுக்கு எப்போதும் ஒரே மாதிரியான சுவையில் குழம்பு செய்து போரடித்து விட்டதா?
இட்லி, தோசைக்கு சற்று வித்தியாசமான சுவையில் குழம்பு அல்லது கிரேவி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சிக்கன் வாங்கியிருந்தால், அந்த சிக்கனை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு கிரேவி செய்யுங்கள்.

இந்த சிக்கன் கிரேவி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, ஆப்பம், இடியாப்பம், புட்டு, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இந்த மாதிரி சிக்கன் கிரேவியை வீட்டில் செய்தால், இரண்டு இட்லி சாப்பிடுபவர்கள், மேலும் 2 இட்லியை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவில் இந்த குழம்பு நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும்.
உங்களுக்கு இட்லி தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அந்த சிக்கன் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 500 கிராம்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* முந்திரி - 6-7
* கசகசா - 1 டீஸ்பூன்
* புதினா - ஒரு கையளவு
* சின்ன வெங்காயம் - 10 (நறுக்கியது)
* எண்ணெய் - 2 - 4 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து 1 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் அதில் முந்திரி, கசகசாவை சேர்த்து சில நொடிகள் வதக்க
வேண்டும்.
* பின்பு துருவிய தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு புதினா இலைகளை சேர்த்து நன்கு கிளறி, இறக்கி குளிர வைத்து,
மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 2-3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின் தீயைக் குறைத்து, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள்,
மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சில நொடிகள் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அரைத்த தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு எண்ணெய் பிரியும் வரை கிளறி வேக வைக்க வேண்டும்.
* பிறகு கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
3-4 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி,
அதன் பின் கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: maryzkitchen



Click it and Unblock the Notifications











