Latest Updates
-
பட்டாணி சாதமும், கத்திரிக்காய் கிரேவியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்று ஒரே நாளில் உருவாகும் ஹன்ஸ், கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
சர்க்கரை நோயாளிகளுக்கான அவல் இட்லியும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க! -
இன்றைய ராசிபலன் 18 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும்
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
Chicken Getti Kuzhambu Recipe In Tamil: உங்கள் வீட்டில் விடுமுறை நாட்கள் வந்தாலே சிக்கன், மட்டன் என்று வாங்கி சமைத்து சாப்பிட்டு, விடுமுறையை கொண்டாடுவீர்களா? அதுவும் இந்த வார விடுமுறை நாளில் சிக்கன் எடுக்க போகிறீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு எப்படியும் ஒரு குழம்பு செய்வீர்களா? அப்படியானால் ஒரே சுவையில் சிக்கன் குழம்பை செய்யாமல், ஒருமுறை மசாலாவை வதக்கி அரைத்து குழம்பு செய்து பாருங்கள், சுவை பிரமாதமாக இருக்கும். அதுவும் சட்டென்று சிக்கன் குழம்பு வைக்க, குக்கரில் செய்யுங்கள்.

இப்படி குக்கரில் சிக்கன் குழம்பு எப்படி செய்வதென்று கோமதீஸ் கிச்சன் என்னும் யூடியூப் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. மேலும் கீழே அந்த சிக்கன் குழம்பு ரெசிபியின் செய்முறையும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* சிக்கன் - 1 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* லேசாக புளித்த தயிர் - 1 டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* கடலை எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 25
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தேங்காய் - சின்ன மூடி (துருவியது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* முந்திரி - 10
* கசகசா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
தாளிப்பதற்கு...
* கடலை எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கருப்பு ஏலக்காய் - 1
* கிராம்பு - 3
* கல்பாசி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* பெரிய தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு,
மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் லேசாக புளித்த தயிரை சேர்த்து
நன்கு பிரட்டி, மூடி வைத்து 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு கிண்ணத்தில் சுடுநீரை எடுத்து, அதில் முந்திரி மற்றும்
கசகசாவை சேர்த்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காய், சோம்பு, மிளகு ஆகியவற்றை
சேர்த்து லேசாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் ஊற
வைத்த முந்திரி மற்றும் கசகசாவை நீருடன் அப்படியே ஊற்றி, மசாலாவை
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கடலை எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கருப்பு ஏலக்காய், கிராம்பு, கல்பாசி, கறிவேப்பிலை
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, பொடியாக
நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா, காஷ்மீரி
மிளாகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு நிறம் மாற கிளறி
விட வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு பிரட்டி
விட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 1 விசில் விட்டு
இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான சிக்கன் குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications