Latest Updates
-
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
2 கப் சுண்டல் இருந்தா இந்த மாதிரி கொண்டைக்கடலை மசாலா வடை செய்யுங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
Hair Care Tips: முடி ராக்கெட் வேகத்தில் வளரணுமா? அப்ப இந்த விதைகளில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
Chicken Getti Kuzhambu Recipe In Tamil: புரட்டாசி முடிந்துவிட்டது. இன்று தான் உங்கள் வீட்டில் சிக்கன் சமைத்து சாப்பிடப் போகிறீர்களா? அப்போது வாய்க்கு விருந்தளிக்கும் வகையில் நல்ல சுவையான சிக்கன் ரெசிபியை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் சிக்கன் கெட்டி குழம்பு செய்யுங்கள்.

இந்த பக்குவத்தில் சிக்கன் கெட்டி குழம்பு செய்யும் போது, அது சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு சட்டென்று செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். இந்த குழம்பின் ஸ்பெஷலே மசாலாவை வறுத்து அரைத்து செய்வது தான்.
உங்களுக்கு இந்த சிக்கன் கெட்டி குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் கெட்டி குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு..
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 100 கிராம்
* கிராம்பு - 5
* பட்டை - 1 துண்டு
* அன்னாசிப்பூ - 1
* ஏலக்காய் - 3
* கல்பாசி - சிறிது
* கறிவேப்பிலை - 2 கொத்து
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
குழம்பு தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் - 3/4 கிலோ
* அரைத்த மசாலா விழுது
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயம், கிராம்பு, பட்டை,
ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி, கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம்
பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வறுக்க
வேண்டும்.
* பிறகு தீயைக் குறைத்துவிட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி
மிளகாய் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள், சோம்பு, கசகசா ஆகியவற்றை
சேர்த்து நன்கு வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை மற்றும் பொடியாக
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு நிறம் மாற வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து, அத்துடன் சுவைக்கேற்ப
உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* பிறகு சிக்கனை கழுவி சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கிளறி, 2 நிமிடம்
வேக வைத்து, பின் அதில் குழம்புக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி,
உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து கலந்து, மூடி
வைத்து, குறைவான தீயில் 15 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 15 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கொத்தமல்லியைத் தூவி
கிளறினால், சுவையான சிக்கன் கெட்டி குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications
