Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ருசியான... சிக்கன் கெட்டி குழம்பு
நீங்கள் சிக்கன் பிரியரா? சிக்கனைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் சிக்கன் கெட்டி குழம்பை இன்று முயற்சித்துப் பாருங்கள்.
சிக்கன் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. சிக்கனில் புரோட்டீன் அதிகம் உள்ளதால், அடிக்கடி இதை உணவில் சேர்ப்பது நல்லது. இது தசை வளர்ச்சிக்கு உதவி புரியும். மேலும் சிக்கனில் பி வைட்டமின்கள் மற்றும் செலினியம் அதிகம் உள்ளது. அதிலும் சிக்கனை எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுவதை விட குழம்பாக தயாரித்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் சிக்கனில் உள்ள முழு சத்துக்களையும் பெறலாம்.

நீங்கள் சிக்கன் பிரியரா? சிக்கனைக் கொண்டு பலவிதமான ரெசிபிக்களை செய்து சுவைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் சிக்கன் கெட்டி குழம்பை இன்று முயற்சித்துப் பாருங்கள். இந்த சிக்கன் கெட்டி குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை போன்றவற்றிற்கும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு சிக்கன் கெட்டி குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள். முக்கியமாக இந்த ரெசிபி பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்றவாறு மிகவும் ஈஸியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* வெங்காயம் - 1
* தக்காளி - 2
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 3 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1 கப் (துருவியது)
* சோம்பு - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்ஸியில் தேங்காய் மற்றும் சோம்பு போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து சூடேறியதும், அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு லேசாக வதக்கி, பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்க வேண்டும்.
* அடுத்ததாக கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து, சிறிது உப்பு தூவி கிளறி 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள தேங்காயையும் சேர்த்து தேவையான அளவு நீர் ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 4-5 விசில் விட்டு இறக்கினால், ருசியான சிக்கன் கெட்டி குழம்பு ரெடி!
Image Courtesy: Divyalakshmi Soundarrajan



Click it and Unblock the Notifications