Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
1/2 கிலோ சிக்கனும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க..
Chicken Egg Podimas Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் வாய்க்கு ருசியாக, அதே சமயம் சற்று வித்தியாசமான ரெசிபியை செய்து கொடுக்க கேட்கிறார்களா? அதுவும் அசைவத்தில் கேட்கிறார்களா? அப்படியானால் 1/2 கிலோ எலும்பில்லாத சிக்கனை வாங்கி வந்து, அதோடு 3 முட்டையை சேர்த்து பொடிமாஸ் செய்து கொடுங்கள்.
இந்த சிக்கன் முட்டை பொடிமாஸை வெறுமனே சாப்பிடலாம் அல்லது சப்பாத்தியுடன் சேர்த்து கூட சாப்பிடலாம். இதில் புரோட்டீன் அதிகம் இருப்பதால், டயட்டில் இருப்போருக்கும் ஏற்றது. குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கும் போது, விரும்பி சாப்பிடுவதோடு, அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். இது பேச்சுலர்களுக்கு ஏற்ற அருமையான ரெசிபியும் கூட.

உங்களுக்கு சிக்கன் முட்டை பொடிமாஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் முட்டை பொடிமாஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 150 கிராம் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
* முட்டை - 4
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவி, நீரை முற்றிலும்
வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு 2 முறை அடித்து எடுத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய சின்ன
வெங்காயத்தை சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் தக்காளியை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த சிக்கனை சேர்த்து கிளறி, மூடி வைத்து 4
நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், கரம் மசாலா,
மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட
வேண்டும்.
* ஒருவேளை சிக்கனில் உள்ள நீர் போதவில்லை என்பது போல் தோன்றினால்,
சிறிது நீரை தெளித்து விட்டு கிளறி, மூடி வைத்து 3-4 நிமிடம் மூடி
வைத்து, குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் வாணலியில் உள்ள சிக்கனை ஓரமாக தள்ளி வைத்துவிட்டு,
முட்டைகளை உடைத்து ஊற்றி, அதன் மேல் சிறிது உப்பு மற்றும் 1/2
டீஸ்பூன் மிளகுத் தூள் சேர்த்து மூடி வைத்து 1 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* 1 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, முட்டைகளை லேசாக திருப்பி
விட்டு, 1 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் முட்டைகளை கிளறி விட்டு, அதோடு 1/2 டீஸ்பூன் மிளகுத்
தூள், 2 பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு 2 நிமிடம்
கிளறி விட்டு இறக்க வேண்டும்.
* இறுதியாக கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான சிக்கன் முட்டை
பொடிமாஸ் தயார்.



Click it and Unblock the Notifications