Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சிக்கன் வாங்குனா ஒருவாட்டி இப்படி சுக்கா செஞ்சு சாப்பிடுங்க... டேஸ்ட் சும்மா அல்டிமேட்டா இருக்கும்...
Chicken Chukka Recipe In Tamil: உங்கள் வீட்டில் இன்று சிக்கன் செய்யப் போகிறீர்களா? நல்ல சுவையான, அதே சமயம் சிம்பிளான ஒரு சிக்கன் சைடு டிஷ் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சிக்கன் சுக்காவை செய்யுங்கள். சிக்கன் சுக்கா என்றதும் பெரிய வேலை இருக்குமோ என்று அஞ்ச வேண்டாம். 15 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் மிகவும் எளிமையாக இருக்கும்.
முக்கியமாக இந்த சிக்கன் சுக்கா செய்ய அதிகம் மெனக்கெட தேவையில்லை. அனைத்து மசாலாக்களையும் சேர்த்து பிரட்டி, ஊற வைத்து வேக வைத்து இறக்கினால் போதும். இந்த சிக்கன் சுக்கா ரசம் சாதத்துக்கு அட்டகாசமாக இருக்கும். சமைக்க தெரியாதவர்கள் கூட இந்த ரெசிபியை செய்யலாம். அந்த அளவில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு சிக்கன் சுக்காவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* சிக்கன் - 700 கிராம்
* மிளகாய் தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
* மல்லித்தூள் - 3/4 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/4 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை எடுத்து, அத்துடன் மிளகாய்
தூள், மல்லித் தூள், சிக்கன் மசாலா, மஞ்சள் தூள், மிளகுத் தூள், இஞ்சி
பூண்டு பேஸ்ட், தயிர், நெய் மற்றும் உப்பு சேர்த்து, அதோடு வதக்கிய
வெங்காயத்தை சேர்த்து நன்கு பிரட்டி, மூடி வைத்து 10 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* 10 நிமிடம் கழித்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உள்ள
எண்ணெயுடன் சிக்கனை சேர்த்து நன்கு பிரட்டி, 1/4 கப் நீரை ஊற்றி
கிளறி, மூடி வைத்து, 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க
வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, உயர் தீயில் வைத்து, நீர் வற்றும் வரை நன்கு
கிளறி, கொத்தமல்லியைத் தூவி பிரட்டி இறக்கினால், சுவையான சிக்கன்
சுக்கா தயார்.



Click it and Unblock the Notifications