Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
மணமணக்கும்.. காரசாரமான... சிக்கன் செட்டிநாடு கிரேவி
உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் எப்போதும் போன்று ஒரே மாதிரியான சிக்கன் ரெசிபியை செய்ய அலுத்துவிட்டதா? அப்படியானால் சிக்கன் செட்டிநாடு கிரேவியை செய்
உங்கள் வீட்டில் சிக்கன் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் எப்போதும் போன்று ஒரே மாதிரியான சிக்கன் ரெசிபியை செய்ய அலுத்துவிட்டதா? அப்படியானால் செட்டிநாடு ரெசிபியை வீட்டில் செய்யுங்கள். அதுவும் சிக்கன் செட்டிநாடு கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, நாண், பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த கிரேவி செய்வது மிகவும் சுலபம். வீட்டில் மசாலா பொருட்கள் இருந்தால், சீக்கிரம் செய்துவிடலாம்.

உங்களுக்கு சிக்கன் செட்டிநாடு கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் செட்டிநாடு கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 500 கிராம்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செட்டிநாடு மசாலாவிற்கு...
* மல்லி - 3 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கல்பாசி - 2 துண்டு
* மிளகு - 2 டீஸ்பூன்
* ஏலக்காய் - 5
* அன்னாசிப்பூ - 1
* கிராம்பு -4
* துருவிய தேங்காய் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிரட்டி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேங்காயை தவிர ஒவ்வொரு பொருட்களையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, அதன் பின் தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளற வேண்டும். பின் தக்காளியை சேர்த்து கிளறி, குக்கரை மூடி 2 விசில் விட்டு, மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, சிக்கனை வாணலியில் ஊற்றி, சிறிது நீரை ஊற்றி மீண்டும் அடுப்பில் வைக்க வேண்டும்.
* பின்பு அரைத்த மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான சிக்கன் செட்டிநாடு கிரேவி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications