Latest Updates
-
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும்
சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சிக்கன் பூனா மசாலாவை எப்படி செய்யணும் தெரியுமா?
Chicken Bhuna Masala Recipe In Tamil: கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதால், அதைக் கொண்டாடும் விதத்தில் பலரது வீடுகளில் பலவிதமான அசைவ உணவுகள் சமைக்கப்படுவதுண்டு. இன்று இரவு உங்கள் வீட்டிற்கு வந்துள்ள விருந்தினர்களுக்கு ஒரு அட்டகாசமாக சமைத்து அசத்த நினைக்கிறீர்களா?
அப்படியானால் சிக்கனை வாங்கி வந்து பூனா மசாலாவை செய்யுங்கள். இந்த சிக்கன் பூனா மசாலா சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இது தவிர, சாதத்துடனும் சப்பிட நன்றாக இருக்கும். இந்த சிக்கன் மசாலா வழக்கமாக செய்யும் மசாலாவை விட தனித்துவமான செய்முறையைக் கொண்டது.

உங்களுக்கு சிக்கன் பூனா மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் பூனா மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
* எண்ணெய் - 1/4 கப்
* நெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கருப்பு ஏலக்காய் - 2
* பச்சை ஏலக்காய் - 4
* கிராம்பு - 4
* பட்டை - 2 இன்ச்
* வரமிளகாய் - 2
* வெங்காயம் - 2 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* தக்காளி - 1 கப் (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* சோம்பு தூள் - 1 டீஸ்பூன்
* தயிர் - 1/2 கப்
* கசூரி மெத்தி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* ஒரு பௌலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித்
தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், சோம்புத் தூள் ஆகியவற்றை எடுத்து
கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதில்
3/4 டீஸ்பூன் உப்பு மற்றும் கலந்து வைத்துள்ள மசாலாவில் பாதியை
சேர்த்து, அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிரட்டி மூடி
வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும். அடுத்து மீதமுள்ள மசாலா பொடியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க
வேண்டும்.
* அதன் பின் தக்காளியை சேர்த்து, உப்பு சிறிது தூவி நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின் வதக்கிய மசாலாவை 2 டேபிள்
ஸ்பூன் எடுத்து தயிருடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த தயிரை அப்படியே வாணலியில் உள்ள மசாலாவுடன் சேர்த்து,
தீயைக் குறைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
* தயிர் நன்கு வெந்து மசாலா கெட்டியாகி எண்ணெய் பிரிந்து வரும் போது
அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின்னர் மற்றொரு அடுப்பில், ஒரு வாணலியை வைத்து, அதில் நெய் ஊற்றி
சூடானதும், வரமிளகாய், பிரியாணி இலை, கருப்பு ஏலக்காய், கிராம்பு,
பட்டை, பச்சை ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மிதமான 2-3 நிமிடம் நன்கு
கிளறி விட வேண்டும்.
* பின்பு அந்த சிக்கனை நீருடன் மற்றொரு அடுப்பில் உள்ள மசாலாவுடன்
சேர்த்து, சிறிது நெய் ஊற்றி 2-3 நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக
வைக்க வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியைத் தூவி கிளறிவிட்டு, மூடி வைத்து குறைவான
தீயில் வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் அடிப்பிடிக்காமல் இருக்க, சிறிது சுடுநீரை 1/4 கப் ஊற்றி
கிளறி விட்டு, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதன் சுவைப் பார்த்து வேண்டுமானால் உப்பு
மற்றும் கரம் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அதன் பின்
கசூரி மெத்தியை சேர்த்து கிளறினால், சுவையான சிக்கன் பூனா மசாலா
தயார்.
Image Courtesy: indianhealthyrecipes



Click it and Unblock the Notifications











