Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Chicken 555 Recipe in Tamil: சிக்கன் 65 என்பது பெரும்பாலான நபர்களுக்கு மிகவும் பிடித்த சிக்கன் ஐட்டமாகும். சிக்கன் 65 எவ்வளவு சுவையானதோ அதேயளவிற்கு செய்வதற்கு மிகவும் எளிதானதும் கூட. எப்போதும் ஒரே சுவையில் சிக்கன் 65 செய்யாமல், ஒருமுறை ஆந்திரா ஸ்டைலில் சிக்கன் 555-யை முயற்சி செய்து பாருங்கள். இந்த சிக்கன் 555 நாம் வழக்கமாக எண்ணெயில் பொரித்து சாப்பிடுவது போன்று இல்லாமல், வித்தியாசமான சுவையில் அட்டகாசமாக இருக்கும்.

இந்த சிக்கன் 555, புரோட்டா, பிரியாணி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். சிக்கனை வித்தியாசமாக நன்கு காரசாரமாக சமைத்து சாப்பிட நினைத்தால், இந்த ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 555-யை செய்து சாப்பிடலாம். ஆந்திரா மற்றும் பெங்களூர் ஹோட்டல்களில் இந்த சிக்கன் 555 மிகவும் பிரபலமானதாகும். இதை நாம் வீட்டிலேயே எளிதாக செய்து சாப்பிடலாம்.
உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 555 எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 555 ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
சிக்கனை பொரிக்க:
- அரை கிலோ எலும்பில்லாத சிக்கன்
- 1 முட்டை
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/2 தேக்கரண்டி உப்பு
- 2 ஸ்பூன் மைதா
- 1/4 கப் சோள மாவு
- பொரிக்கத் தேவையான எண்ணெய்
மசாலா செய்ய:
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1/4 ஸ்பூன்சோம்பு
- 1/2 இன்ச் இஞ்சித் துண்டு, பொடியாக நறுக்கியது
- 2 பூண்டு பல், பொடியாக நறுக்கியது
- 1/4 கப் வெங்காயம், பொடியாக நறுக்கியது
- 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 ஸ்பூன் உப்பு
- 1 ஸ்பூன் கொத்தமல்லித் தூள்
- 1 ஸ்பூன் மிளகாய்த் தூள்
- 2 பச்சை மிளகாய், பொடியாக நறுக்கியது
- 1 ஸ்பூன் உடைத்த மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை, பொடியாக நறுக்கியது
- 1/4 கப் புதினா இலைகள், பொடியாக நறுக்கியது
- 2 ஸ்பூன் கொத்தமல்லி இலைகள், பொடியாக நறுக்கியது
- 2 ஸ்பூன் வெங்காயத்தாள், பொடியாக நறுக்கியது
- 1/4 கப் தண்ணீர்
- 1 ஸ்பூன் சோயா சாஸ்
- 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு
செய்முறை:
- எலும்பில்லாத சிக்கன் மார்புப் பகுதியை மெல்லிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். கழுவிய சிக்கனுடன் முட்டை, மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- அதனுடன் சோள மாவு மற்றும் மைதா மாவைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதனை 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி, அதில் ஊறவைத்த சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும். அவற்றை இரண்டு நிமிடங்கள் வறுக்கவும். இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு திருப்பிப் போட்டு, மேலும் சில நிமிடங்கள் வறுக்கவும்.
- இதே பாணியில் மீதமுள்ள சிக்கன் துண்டுகளை வறுத்து எண்ணெயை வடிகட்டி தனியாக வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, அதில் சோம்பைச் சேர்க்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துச் சில நிமிடங்கள் வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அதனுடன் மஞ்சள் தூள், உப்பு, மல்லித் தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய் மற்றும் உடைத்த மிளகாய் துகள்களைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, புதினா, கொத்தமல்லித் தழை மற்றும் வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- கால் கப் தண்ணீர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு வறுத்த சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, அவை மசாலாவில் நன்றாகப் படியுமாறு கிளறவும்.
- பின்னர் சோயா சாஸ் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்றாகக் கிளறவும். அவ்வளவுதான் சுவையான ஆந்திரா ஸ்டைல் சிக்கன் 555 ரெடி!



Click it and Unblock the Notifications