Latest Updates
-
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்!
செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு காரக்குழம்பு
உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் பிடிக்குமா? உங்கள் வீட்டில் செட்டிநாடு ஸ்டைல் சைவ குழம்பு ஏதேனும் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கைக் கொண்டு காரக்குழம்பு செய்யலாம்.
செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்துமே தனிச்சுவையுடன் நன்கு காரமாகவும் இருக்கும். உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் பிடிக்குமா? உங்கள் வீட்டில் செட்டிநாடு ஸ்டைல் சைவ குழம்பு ஏதேனும் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பலரும் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கைக் கொண்டு ஒரு அற்புதமான காரக்குழம்பு செய்யலாம். இந்த செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு காரக்குழம்பு சாதத்திற்கு அட்டகாசமாக இருக்கும்.

கீழே செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு காரக்குழம்பு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 5 (பெரிதாக நறுக்கியது)
* கத்திரிக்காய் - 1 கப் (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
* சாம்பார் பவுடர் - 4 டேபிள் ஸ்பூன்
* புளி நீர் - 1 கப்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* பூண்டு - 8 பற்கள்
* துருவிய தேங்காய் - 1 கப்
* கசகசா - 3 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* வெந்தயம் - 1 டீஸ்பூன்
* கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, வெந்தயம், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, 2 நிமிடம் வதக்கவும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு மென்மையாக வதக்கவும். அதன் பின் மஞ்சள் தூள், சாம்பார் பவுடர், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
* பின்பு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து பிரட்டி, புளி நீரை ஊற்றி நன்கு கிளறி, பச்சை வாசனை போகும் வரை மற்றும் காய்கறிகள் நன்கு மென்மையாக வேகும் வரை கொதிக்க விடவும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய், பூண்டு மற்றும் கசகசா சேர்த்து, சிறிது நீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின் அரைத்த தேங்காய் விழுதை குழம்புடன் சேர்த்து தேவையான அளவு நீரை ஊற்றி, 20 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, சுவை பார்த்து உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு காரக்குழம்பு தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications