Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
செட்டிநாடு வாழைக்காய் வறுவல்
உங்கள் வீட்டில் செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய அதிக ஆர்வம் கொள்பவரா? அப்படியானால் உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்துவதற்கு ஒரு அற்புதமான செட்டிநாடு ரெசிபியை கீழே கொடுத்துள்ளோம். அது தான் செட்டிநாடு வாழைக்காய் வறுவல்.
நீங்கள் செட்டிநாடு ரெசிபிக்களின் பிரியரா? உங்கள் வீட்டில் செட்டிநாடு ரெசிபிக்களை செய்ய அதிக ஆர்வம் கொள்பவரா? அப்படியானால் உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்துவதற்கு ஒரு அற்புதமான செட்டிநாடு ரெசிபியை கீழே கொடுத்துள்ளோம். அது தான் செட்டிநாடு வாழைக்காய் வறுவல். இந்த வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு வாழைக்காய் வறுவல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு வாழைக்காய் வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வாழைக்காய் - 2
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* பூண்டு - 3 பல்
* இஞ்சி - 1/4 இன்ச்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
பொடிகள்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் வாழைக்காயின் இரு முனைகளையும் நீக்கிவிட்டு, தோலையும் நீக்கி விட வேண்டும். பின் அதை சிறு நீள நீளத் துண்டுகளாக வெட்டி, நீரில் உடனே போட்டுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாழைக்காய் கறுத்துவிடும்.
* பின் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு பௌலில் பொடிகள் அனைத்தையும் ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வாழைக்காயை போட்டு ஒருமுறை நன்கு பொன்னிறமாகவும், மொறுமொறுப்பாகவும் மாறும் வரை வறுத்து தனியாக ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்க வேண்டும்.
* வெங்காயம் நன்கு வதங்கியதும், அதில் அரைத்த விழுது, மசாலா பொடிகள் மற்றும் உப்பு சேர்த்து ஒருமுறை கிளறி, பின் வறுத்து வைத்துள்ள வாழைக்காயை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் சிறிது நேரம் மூடி வைத்து வேக வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு வாழைக்காய் வறுவல் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications