Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செட்டிநாடு தக்காளி புதினா சட்னி ரெசிபி... இந்த சூப்பரான சட்னிக்கு வெங்காயம், பூண்டு தேவையில்ல...!
Chettinad Tomato Pudina Chutney Recipe in Tamil: சுவையான உணவுகள் என்றாலே தமிழ்நாட்டில் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது செட்டிநாடு உணவுகள்தான். அந்த அளவிற்கு செட்டிநாடு உணவுகளின் சுவையும், தனித்துவமும் புகழ்வாய்ந்தவை.
இட்லி, தோசை என்று வரும்போது எப்போதும் ஒரே மாதிரியான சட்னி செய்யாமல் செட்டிநாடு ஸ்டைல் சட்னி அரைக்கும் போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி ஒரு சுவையான செட்டிநாடு சட்னிதான் தக்காளி புதினா சட்னி.

இந்த தக்காளி புதினா சட்னிக்கு வெங்காயம், பூண்டு மற்றும் தேங்காய் போன்ற எதுவுமே தேவையில்லை. எளிதில் செய்யக்கூடிய இந்த சட்னி டிபன் வகைகளுக்கு மட்டுமின்றி சாதத்திற்கு கூட சூப்பராக இருக்கும். இந்த பதிவில் செட்டிநாடு தக்காளி புதினா சட்னியை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையானப் பொருட்கள்:
- நறுக்கிய தக்காளி - 1 கப்
- புதினா இலைகள் - 1/4 கப்
- கொத்தமல்லி இலைகள் - 1/4 கப்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் - 5
- எண்ணெய் - வதக்க 1 டேபிள்ஸ்பூன்
- எண்ணெய் - தாளிக்க 1 டேபிள்ஸ்பூன்
- கடுகு - 1/2 டேபிள்ஸ்பூன்
- உடைத்த உளுந்து - 1/2 டேபிள்ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
- ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் அதில் சீரகத்தை போடவும். சீரகம் வெடித்ததும் அதில் வர மிளகாயை போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.
- இப்போது புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து சிறிது வதக்கவும். பழுப்பு நிறமாக மாறாமல், அவை சுருங்கும் வரை வதக்கவும்.
- இப்போது நறுக்கிய தக்காளியைச் சேர்த்து, அது மென்மையாகும் வரை வதக்கவும்.
- தக்காளி நன்கு வெந்தவுடன், முழுவதுமாக ஆறவிடவும். மிக்சியில் இந்த கலவையைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கொர கொரவென்று அரைக்கவும்.
- பேஸ்ட் போல அரைக்கக் கூடாது, புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் கொஞ்சமாக தெரிவது போல இருக்க வேண்டும்.
- சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி அதை தாளிக்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் 1 ஸ்பூன் எண்ணெயை ஊற்றி அதில் கடுகு போட்டு தாளிக்கவும், அதன்பின் உளுந்து சேர்த்து அதை சட்னி மீது ஊற்றவும்.
- சூப்பரான செட்டிநாடு தக்காளி புதினா சட்னி ரெடி. இட்லி, தோசைக்கு இது சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications