Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க
உருளைக்கிழங்கை இப்படி செட்டிநாடு ஸ்டைலில் ரோஸ்ட் செய்யுங்க.. செம சூப்பரா இருக்கும்..
Chettinad Style Urulaikizhangu Roast Recipe: உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கை விரும்பி சாப்பிடுவார்களா? நீங்கள் எப்போதும் ஒரே மாதிரி தான் உருளைக்கிழங்கை சமைப்பீர்களா? இன்று சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கை சமைக்க நினைக்கிறீர்களா?
அப்படியானால் செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்யுங்கள். இந்த உருளைக்கிழங்கு ரோஸ்ட் சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதோடு இது செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பேபி உருளைக்கிழங்கு - 1 1/2 கப் (வேக வைத்து, தோலுரித்தது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* புளிச்சாறு - டேபிள் ஸ்பூன்
* வெல்லம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - தேவையான அளவு
செட்டிநாடு மசாலாவிற்கு...
* மல்லி விதை - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 1
* கிராம்பு - 4
* வரமிளகாய் - 4
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் பேபி உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு, உருளைக்கிழங்கு
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில்
விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து நீரை வடிகட்டிவிட்டு,
உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, இரண்டு துண்டுகளாக வெட்டிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் செட்டிநாடு
மசாலாவிற்கு கொடுத்துள்ள மல்லி, கறிவேப்பிலை, வரமிளகாய், பட்டை,
கிராம்பு, ஏலக்காய், மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுத்து, பின்
துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைத்து,
மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து 10 நிமிடம் கிளறி
வேக வைத்து, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, நீர்
வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக வெல்லம், புளிச்சாறு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
நன்கு கிளறி, 2-3 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு
ஸ்டைல் உருளைக்கிழங்கு ரோஸ்ட் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications