Latest Updates
-
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது!
உருளைக்கிழங்கை ஒருமுறை இப்படி வறுவல் செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Chettinad Style Potato Varuval Recipe In Tamil: மதிய வேளையில் சாதத்துக்கு என்ன பொரியல் அல்லது வறுவல் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு உருளைக்கிழங்கு என்றால் பிடிக்குமா? அடிக்கடி வீட்டில் உருளைக்கிழங்கு செய்வீர்களா?
அதுவும் ஒரே மாதிரி தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை உருக்கிழங்கை செய்வதாக இருந்தால், செட்டிநாடு ஸ்டைலில் வறுவல் செய்யுங்கள். இந்த உருளைக்கிழங்கு வறுவல் சாம்பார், சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறைகொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து பொடி செய்வதற்கு...
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்கை கழுவி, குக்கரில் போட்டு, கிழங்கு
மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 2-3
விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, கிழங்கின் தோலை நீக்கிவிட்டு,
துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு,
உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, சோம்பு, வரமிளகாய், பட்டை, கிராம்பு
சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர்
ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் வேக வைத்து துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து
2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பெருங்காயத் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் அரைத்து
வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* எண்ணெய் குறைவாக இருப்பதாக உணர்ந்தால், சிறிது எண்ணெய் ஊற்றி, நன்கு
மொறுமொறுவென்று வரும் வரை குறைவான தீயில் வைத்து வேக வைத்து
இறக்கினால், சுவையான செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications