Latest Updates
-
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
நார்த் கர்நாடகா தேங்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
வெங்காயம், தக்காளி இருந்தா போதும்.. இப்படி குருமா செய்யுங்க.. இட்லி, சப்பாத்திக்கு அள்ளும்..
சப்பாத்திக்கான அற்புதமான சைடு டிஷ்.. செட்டிநாடு முள்ளங்கி மசாலா
உங்கள் வீட்டில் முள்ளங்கி உள்ளதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் முள்ளங்கியைக் கொண்டு செட்டிநாடு மசாலா செய்யுங்கள்.
இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? ஆனால் அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முள்ளங்கி உள்ளதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்குமா? அப்படியானால் முள்ளங்கியைக் கொண்டு செட்டிநாடு மசாலா செய்யுங்கள். இந்த செட்டிநாடு முள்ளங்கி மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதம் அல்லது புலாவ் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு முள்ளங்கி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு முள்ளங்கி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முள்ளங்கி - 1 (வட்டமாக வெட்டிக் கொள்ளவும்)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 3-4
* பூண்டு - 4-5
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, மல்லி சேர்த்து வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பூண்டு, வெங்காயம் மற்றும் தக்காளியை ஒவ்வொன்றாக சேர்த்து, சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முள்ளங்கி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் நீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி கொதிக்க வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, முள்ளங்கி வேகும் வரை கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு முள்ளங்கி மசாலா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications