Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. அடிக்கடி செய்வீங்க..
Chettinad Potato Fry Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் உருளைக்கிழங்கு பிரியரா? உருளைக்கிழங்கை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது உங்கள் வீட்டில் சமைப்பீர்களா? மதிய வேளையில் நீண்ட நேரம் சமையலறையில் இருக்க பிடிக்கலையா? அப்படியானால் ரசம் அல்லது தயிர் சாதத்துக்கு ஏற்ற ஒரு சைடு டிஷ்ஷை மட்டும் செய்யுங்கள்.
அதுவும் உருளைக்கிழங்கை கொண்டு செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவலை செய்யுங்கள். இந்த வறுவலின் ஸ்பெஷலே அதற்கு பிரத்யேகமாக தயார் செய்யும் ஒரு பொடி தான். அந்த பொடியை செய்து சேர்க்கும் போது, உருளைக்கிழங்கின் சுவை இன்னும் பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த வறுவல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* உருளைக்கிழங்கு - 3 (துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பொடிக்கு...
* மல்லி விதை - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* கிராம்பு - 1
* பட்டை - சிறிய துண்டு
தாளிப்பதற்கு...
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 2 பல் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பெரிய
துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்குகளை சேர்த்து, கிழங்கு மூழ்கும்
அளவில் நீரை ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி
3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மல்லி, உளுத்தம்
பருப்பு, சோம்பு, கடலைப் பருப்பு, சீரகம், வரமிளகாய், மிளகு,
கிராம்பு, பட்டை ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து
இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு சற்று கொரகொரவென்று
அரைத்து பொடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை வெளியே
எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு
பற்களை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் உருளைக்கிழங்குகளை சேர்த்து, பின் பொடித்து வைத்துள்ள
பொடி, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3-4 நிமிடம்
நன்கு கிளறிவிட்டு இறக்கினால், சுவையான செட்டிநாடு உருளைக்கிழங்கு
வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications