Latest Updates
-
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஈவ்னிங் டைம்-ல பால், சர்க்கரை எதுவும் சேர்க்காம.. இந்த செட்டிநாடு ஸ்வீட்டை செஞ்சு பாருங்க.. செமயா இருக்கும்..
Chettinad Pasi Paruppu Halwa Recipe: மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் சாப்பிட ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் ஸ்வீட் ஏதாவது செய்து கொடுக்குமாறு கேட்கிறார்களா? என்ன ஸ்வீட் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பாசிப்பருப்பு இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் ஒரு செட்டிநாடு ஸ்வீட்டை செய்யலாம். அது தான் செட்டிநாடு பாசிப்பருப்பு அல்வா.
முக்கியமாக இந்த ஸ்வீட்டிற்கு பால், சர்க்கரை என்று எதுவும் தேவையில்லை. இதனால் இந்த ஸ்வீட் ஆரோக்கியமானதும் கூட. பாசிப்பருப்பு குளிர்ச்சி என்பதால், கோடையில் உடல் சூட்டைக் குறைக்க இந்த ஸ்வீட்டை செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு செட்டிநாடு பாசிப்பருப்பு அல்வாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு பாசிப்பருப்பு அல்வா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு - 1 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* வெல்லம் - 2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 10
* ரவை - 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நீரில் 2 முறை கழுவிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள
பாசிப்பருப்பை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து, 1 1/2 கப் நீரை
ஊற்றி, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பாசிப்பருப்பை கரண்டியால்
மசித்து விட வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை எடுத்து, அதில் 1 கப் நீரை ஊற்றி
அடுப்பில் வைத்து, வெல்லம் கரைந்ததும், அதை இறக்கிக் கொள்ள
வேண்டும்.
* அடுத்து ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
நெய் ஊற்றி சூடானதும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்க
வேண்டும்.
* பின் அதில் ரவையை சேர்த்து கிளறி விட வேண்டும். பின்பு துருவிய
தேங்காயை சேர்த்து நல்ல மணம் வந்து ஓரளவு நிறம் மாறும் வரை வறுக்க
வேண்டும்.
* பிறகு அதில் வெல்ல நீரை வடிகட்டி ஊற்ற வேண்டும்.
* பின்பு மசித்து வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து தொடர்ந்து
கரண்டியால் கட்டிகளை மசித்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் உப்பு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி, அல்வா
போன்று நன்கு சுருண்டு வரும் வரை கிளறி விட வேண்டும்.
* வாணலியில் ஒட்டாத அளவில் சுருண்டு வரும் போது அடுப்பை அணைத்து
விட்டால், சுவையான செட்டிநாடு பாசிப்பருப்பு அல்வா தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications