Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தெருவே மணக்கும் செட்டிநாடு மட்டன் குழம்பு ரெசிபி... சண்டே இதை செஞ்சு எல்லாரையும் அசத்துங்க...!
Chettinad Mutton Kulambu Recipe in Tamil: எல்லா நாட்களிலும் இட்லிக்கு துணை சட்னி சாம்பார் தான். என்ன தான் விதமாக சட்டினியும் வித்தியாசமாக சாம்பாரும் செய்தாலும் அசைவ பிரியர்களுக்கு வாரத்தில் குறைந்தது ஒரு நாளாவது அசைவ குழம்பு வேண்டும். அதிலும் மட்டன் என்பது பெரும்பாலானவர்களுக்கு விருப்பமான ஒன்று.
சில அசைவ பிரியர்கள் மட்டன் உணவுகளை பற்றி வர்ணிக்கும் போது கேட்பவருக்கு நாவில் எச்சில் ஊற ஆரம்பித்து விடும். அந்த வர்ணனை வரிசையில் இடம் பெரும் ஒன்று தான் இட்லியும் மட்டன் குழம்பும். காலை நேரத்தில் விரைவாக சமைக்க விரும்புபவர்களுக்கு இந்த மட்டன் குழம்பு செய்ய எளிதாக இருக்கும். வீட்டில் ஒரு முறை இப்படி குக்கரில் சமைத்து பாருங்களேன்!

தேவையான பொருட்கள்:
மட்டன் - ¾ கிலோ
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 2
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 1 ½ ஸ்பூன்
மஞ்சள் தூள் - ¼ ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
மசாலா அரைக்க:
கிராம்பு - 10
ஏலக்காய் - 4
பட்டை - விரல் அளவு துண்டு
சோம்பு - 2 ஸ்பூன்
அன்னாசிப்பூ - 1
அரைக்க:
தேங்காய் - ½ மூடி (சிறியது)
கசகசா - ½ டீ ஸ்பூன்
முந்திரி - 5
செய்முறை:
- கிராம்பு, ஏலக்காய், பட்டை, சோம்பு, மற்றும் அன்னாசிப்பூ ஈரம்
இல்லாத மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து வைக்கவும்.
- மட்டனை சுத்தமாக அலசி கடைசியாக மஞ்சள் மற்றும் சிறிதளவு உப்பு
சேர்த்து கழுவி வைக்கவும்.
- வெங்காயத்தை தோல் சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ எடுத்து கொள்ளவும்.
- தேங்காயுடன், கசகசா, மற்றும் முந்திரி சேர்த்து நன்றாக அரைத்து
எடுத்து கொள்ளவும்.
- அடுப்பில் குக்கரை வைத்து 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
- அதில் அரைத்து வைத்த பட்டை கிராம்பு மசாலாவை சேர்த்து நன்றாக
கிளறவும்.
- அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய்
சேர்த்து வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள்
தூள், மிளகு தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக
வதக்கவும்.
- மசாலா பொருட்களின் பச்சை வாசம் போனதும் சுத்தம் செய்து வைத்த மட்டன்
துண்டுகளை சேர்த்து கிளறவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் 5 விசில்
வரும் வரை வைக்கவும்.
- பின் விசில் அடங்கியதும் அதனுடன் அரைத்து வைத்த தேங்காய் விழுதை
சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.
- இட்லிக்கு அருமையாக இருக்கும் சுவையான மட்டன் குழம்பு 15
நிமிடத்தில் ரெடி!



Click it and Unblock the Notifications