Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
செட்டிநாடு காளான் பெப்பர் மசாலா ரெசிபி... இந்த மாதிரி செய்யுங்க... தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும்...!
Chettinad Mushroom Pepper Gravy Recipe in Tamil: செட்டிநாடு என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சுவையான உணவுகள்தான். செட்டிநாடு உணவுகள் என்றாலே அவை சுவையாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே ஆழமாக உள்ளது. இப்போது வானிலை மிகவும் குளிராக இருப்பதால் ஆரோக்கியமாக சாப்பிட வேண்டியது அவசியம், ஆரோக்கியமான உணவுகள் சுவையாகவும் இருப்பது கூடுதல் நன்மையாகும்.
சிக்கன், மட்டனுக்கு பிறகு மக்கள் அதிகம் விரும்பும் ஒரு பொருள் என்றால் அது காளான்தான். பல்வேறு ஆரோக்கிய குணங்கள் நிறைந்த காளானை செட்டிநாடு ஸ்டைலில் மசாலா செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்துடன் சுவையையும் கொடுக்கும். இந்த செட்டிநாடு மஷ்ரூம் மசாலா இட்லி, தோசை, சப்பாத்தி ஏன் சாதத்திற்கும் கூட பக்காவாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு மஷ்ரூம் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மஷ்ரூம் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 1 கப் பட்டன் காளான், சுத்தம் செய்து நறுக்கியது
- 1 தக்காளி, பொடியாக நறுக்கியது
- 1 பச்சை மிளகாய், கீறியது
- 1 பிரியாணி இலை
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலைகள், நறுக்கியது
- 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- உப்பு, தேவையான அளவு
- 4 டீஸ்பூன் புதிய தேங்காய், துருவியது
- 1 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி விதைகள்
- 1 டீஸ்பூன் கருப்பு மிளகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் கசகசா
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 இன்ச் இலவங்கப்பட்டை
- 2 ஏலக்காய்
- 4 கிராம்பு
- 1 நட்சத்திர சோம்பு
- 1 ஜாவித்திரி, சிறிய பூ
- 3 வர மிளகாய்
- 2 டீஸ்பூன் வெள்ளை உளுத்தம் பருப்பு
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவற்றில் கொத்தமல்லி, மிளகு, சீரகம், கசகசா, சோம்பு, ஜாவிதிரி பூ,காய்ந்த சிவப்பு மிளகாய் ஆகியவற்றை நறுமணம் வரும் வறுக்க வேண்டும்.
- வறுத்து வைத்த பொருட்களை சிறிது சூடு ஆரிய பிறகு மிக்சி ஜாரில் நன்கு விழுதாக அரைத்து வைத்து கொள்ள வேண்டும்.
- பிறகு சின்ன வெங்காயத்தை திப்பியாக அரைத்துக்கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றை நன்கு விழுதாக அரைத்து கொள்ள வேண்டும்.
- ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்து கொண்டு சூடாக்கி சமையல் எண்ணெய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வெடிக்க விட வேண்டும்.
- இப்போது அரைத்து வைத்த வெங்காயத்தை சேது நன்கு சிவக்கும்படி வதக்கவும். பிறகு இஞ்சிபூண்டு விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
- இதனுடன் நறுக்கிய தக்காளி மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- பிறகு அரைத்து வாய்த்த மசாலா பொருட்களை இதனுடன் சேர்த்து உப்பு போட்டு சிறுது தண்ணீர் ஊற்றி கிரேவியை நன்கு கிளறி கொண்டு இருக்க வேண்டும்.
- இப்போது சுத்தம் செய்து நறுக்கிய காளான்களை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.இவற்றை மூடி போட்டு 5 நிமிடங்கள் வேகா விட வேண்டும்.
- காளான்கள் வெந்தவுடன், அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலைகளை தூவி இறக்க வேண்டும்.
- சூடான சுவையான செட்டிநாடு மிளகு கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications