Latest Updates
-
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
இட்லி, தோசைக்கு ஒருடைம் இந்த கதம்ப சட்னியை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க.. -
அக்டோபர் 16, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
துலாம் ராசியில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கப்போகுது! -
Navratri 2026: நவராத்திரியில் துர்கா தேவியை கனவில் கண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? -
வாஸ்துப்படி வீட்டின் இந்த 5 இடத்தில் மயில் இறகை வையுங்க.. செல்வம் இருமடங்காக அதிகரிக்கும்.. -
18 ஆண்டுகளுக்கு பின் கடகம் செல்லும் கேது: இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிந்து அதிர்ஷ்ட கதவு திறக்கும்! -
மணமணக்கும்.. தட்டப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அல்டிமேட்டா இருக்கும்..
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
Chettinad Murungakkai Kara Kuzhambu Recipe in Tamil: தினமும் சாம்பார், ரசம் வைத்து போரடித்து விட்டதா? மதிய நேரத்தில் சிம்பிளாக சமையலை முடிக்க விரும்புகிறீர்களா? அதே சமயம் நல்ல சுவையான மற்றும் வீடே மணக்கும் சுவையான குழம்பை சாதத்திற்கு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முருங்கைக்காய் உள்ளதா? அப்படியானால் அவற்றை வைத்து தெருவே மணக்கும் அளவில் ஒரு சுவையான செட்டிநாடு கார குழம்பை செய்யுங்கள்.

இந்த செட்டிநாடு முருங்கைக்காய் கார குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவை அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இந்த குழம்பை செய்து சாப்பிடலாம். இந்த குழம்பு சுண்ட சுண்ட அதன் சுவை மேலும் அதிகரிக்கும். எனவே இந்த குழம்பை இரண்டு, மூன்று நாட்கள் வைத்துக் கூட சாப்பிடலாம்.
உங்களுக்கு முருங்கைக்காய் கார குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் கார குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைக்க:
- 2 ஸ்பூன் கடலை எண்ணெய்
- 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
- 1 ஸ்பூன் கடலை பருப்பு
- 1/4 ஸ்பூன் கடுகு
- 1/4 ஸ்பூன் வெந்தயம்
- 5 வர மிளகாய்
- 1 ஸ்பூன் மிளகு
- 2 ஸ்பூன் மல்லி விதைகள் (தனியா)
- 1 ஸ்பூன் சீரகம்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 1 பெரிய வெங்காயம், நறுக்கியது
- 2 தக்காளி, நறுக்கியது
- 1 ஸ்பூன் உப்பு
- 1/4 ஸ்பூன் பெருங்காயத் தூள்
- 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
- 1/4 கப் துருவிய புதிய தேங்காய்
குழம்பு வைக்க தேவையானவை:
- பெரிய எலுமிச்சை அளவு புளி
- 3 ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1/4 ஸ்பூன் கடுகு
- 2 வர மிளகாய்
- 2 கொத்து கறிவேப்பிலை
- 15 சின்ன வெங்காயம்
- 3 முருங்கைக்காய்
- 1 ஸ்பூன் வெல்லம்
செய்முறை:
- பெரிய எலுமிச்சை அளவு புளியை 2 கப் வெதுவெதுப்பான தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊறவைக்கவும். புளி நன்கு ஊறியதும், நன்றாக பிழிந்து சாறு எடுத்து தனியாக வைக்கவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து லேசாக பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
- பின்னர் அதனுடன் கடுகு, வெந்தயம், வர மிளகாய், மிளகு, மல்லி விதைகள், சீரகம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்க்கவும். மிதமனா தீயில் வைத்து, கடுகு வெடித்து, கறிவேப்பிலை மொறுமொறுப்பாகும் வரை வறுக்கவும்.
- பின்னர் நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, அவை மென்மையாகும் வரை வதக்கவும். வெங்காயம் மென்மையாக மாறியதும், தக்காளி, உப்பு, பெருங்காயம் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
- தக்காளி நன்கு குழைந்து வரும் வரை வதக்கவும். தக்காளி குழைந்த பிறகு, துருவிய தேங்காயைச் சேர்த்து, அனைத்தும் ஒன்று சேரும் வகையில் ஒரு நிமிடம் வதக்கி அடுப்பிலிருந்து இறக்கி, ஆறவிடவும்.
- கலவை ஆறியதும் வறுத்த மசாலா கலவையை, 2 கப் வரை தண்ணீர் சேர்த்து, மென்மையான விழுதாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். அதில் கடுகு மற்றும் வர மிளகாயைச் சேர்க்கவும். கடுகு பொரிந்ததும், நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும். வெங்காயம் மென்மையாகும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய முருங்கைக்காயை வாணலியில் சேர்க்கவும். அதனுடன் புளிக்கரைசலைச் சேர்த்து, சிறிது உப்பும் போட்டு, குறைந்த தீயில் 15 நிமிடங்கள் வேகவிடவும்.
- முருங்கைக்காய் மென்மையாக வெந்ததும், அதில் வெல்லத்தைச் சேர்க்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதைச் சேர்த்து, சுவை பார்த்துத் தேவைப்பட்டால் இன்னும் சிறிது உப்பு சேர்க்கவும்.
- வாணலியை மூடி வைத்து, குறைந்த தீயில் 15 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
- இந்த அட்டகாசமான கார குழம்பை அடுப்பிலிருந்து இறக்கி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.



Click it and Unblock the Notifications
