Latest Updates
-
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம்
மணமணக்கும்.. காரசாரமான... செட்டிநாடு மிளகு குழம்பு
Chettinad Milagu Kuzhambu: தினமும் என்ன சமையல் செய்வது என்று தெரியாமல் புலம்புகிறீர்களா? உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? ஆனால் நல்ல சுவையான ஒரு குழம்பு செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் செட்டிநாடு மிளகு குழம்பு செய்யுங்கள். உங்கள் வீட்டில் உள்ளோர் செட்டிநாடு ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுவார்கள் என்றால், நிச்சயம் இந்த செட்டிநாடு மிளகு குழம்பு ரெசிபியும் பிடிக்கும்.

இந்த செட்டிநாடு மிளகு குழம்பை சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த குழம்பை சளி பிடித்திருக்கும் போது செய்து சாப்பிட்டால், சளி உடனே முறிந்து நல்ல நிவாரணத்தைப் பெறலாம். இந்த குழம்பானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
உங்களுக்கு செட்டிநாடு மிளகு குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு மிளகு குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 20
* பூண்டு - 5 பல்
* வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
* புளி - ஒரு எலுமிச்சை அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை - சிறிது
* வெல்லம் - 1 டீஸ்பூன்
மிளகு மசாலா பொடிக்கு...
* மிளகு - 2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி விதைகள் - 1 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் புளியை 3/4 கப் நீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 'மிளகு மசாலா
பொடிக்கு' கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வறுத்து இறக்கி
குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், வெந்தயம், பூண்டு மற்றும் சின்ன வெங்காயத்தைப் போட்டு
நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி நன்கு எண்ணெய் பிரியும் வரை நன்கு
கொதிக்க வைக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 4 டேபிள் ஸ்பூன் மிளகு மசாலா பொடி மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து
கொதிக்க வைக்க வேண்டும்.
* அதே சமயம் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, சிறிது பெருங்காயத்
தூள் சேர்த்து தாளித்து இறக்கி, கொதித்துக் கொண்டிருக்கும் குழம்புடன்
சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான செட்டிநாடு மிளகு குழம்பு
தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications