Latest Updates
-
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
செட்டிநாடு கத்திரிக்காய் பொடி வறுவல்
Chettinad Kathrikkai Podi Varuval: மதிய வேளையில் என்ன சைடு டிஷ் செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அந்த கத்திரிக்காயைக் கொண்டு ஒரு செட்டிநாடு சைடு டிஷ் செய்யுங்கள். அதுவும் செட்டிநாடு கத்திரிக்காய் பொடி வறுவலை செய்யுங்கள்.
இந்த வறுவல் சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு செட்டிநாடு கத்திரிக்காய் பொடி வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு கத்திரிக்காய் பொடி வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிறிய கத்திரிக்காய் - 8
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பொடிக்கு...
* கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - ஒரு சிறிய துண்டு
* வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* எள்ளு விதைகள் - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* மிளகு - 5
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய தேங்காய் - 1/4 கப்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய்,
வேர்க்கடலை, மஞ்சள் தூள் மற்றும் புளியைத் தவிர, பொடி செய்வதற்கு
கொடுத்துள்ள மற்ற பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து
இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வேர்க்கடலையை அதே வாணலியில் போட்டு வறுத்து, அதையும் வறுத்த
பொருட்களுடன் சேர்க்க வேண்டும்.
* பின்பு துருவிய தேங்காயை சேர்த்து நல்ல மணம் வரும் வரை பொன்னிறமாக
வறுத்து, அதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்கள் அனைத்தையும் சேர்த்து,
அத்துடன் மஞ்சள் தூள் மற்றும் புளியை சேர்த்து, நன்கு மென்மையாக
அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து கத்திரிக்காயை கழுவி, அதை நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அதில் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, கத்திரிக்காயை போட்டு
நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து
குறைவான தீயில் வைத்து, நன்கு வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பொடியைத் தூவி நன்கு கிளறி, 10
நிமிடம் மொறுமொறுப்பாகும் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான
செட்டிநாடு கத்திரிக்காய் பொடி வறுவல் தயார்.
Image Courtesy: traditionallymodernfood



Click it and Unblock the Notifications