Latest Updates
-
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் சொந்த ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்! -
1 கப் சுண்டல் இருந்தா செட்டிநாடு ஸ்டைலில் இந்த மாதிரி சுக்கா செய்யுங்க - தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து கன்னியில் உருவாகும் பத்ர மகாபுருஷ ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்! -
கீ போர்டுகளில் எழுத்துக்கள் ஏன் வரிசையாக இல்லாமல் மாறி மாறி உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கும்பகோணம் கல்யாண வீட்டு கடப்பா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 26 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு முன்னேற்றதிக்கான கதவு திறக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 02-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகுது! -
செப்டம்பர் 1-ல் சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் திடீர் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
மணமணக்கும்.. சுவையான... செட்டிநாடு முட்டை மசாலா
உங்களுக்கு முட்டையை வேக வைத்து சாப்பிட பிடிக்காதா? அப்படியானால் அதைக் கொண்டு முட்டை மசாலா செய்து சாப்பிடுங்கள். செட்டிநாடு முட்டை மசாலா இன்னும் சுவையாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
தினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதுவும் முட்டையை வேக வைத்து சாப்பிட்டால் தான் அதன் முழு நன்மைகளைப் பெற முடியும். ஆனால் உங்களுக்கு முட்டையை வேக வைத்து சாப்பிட பிடிக்காதா? அப்படியானால் அதைக் கொண்டு முட்டை மசாலா செய்து சாப்பிடுங்கள். முட்டை மசாலாவை பலவாறு செய்யலாம். அதில் செட்டிநாடு முட்டை மசாலா இன்னும் சுவையாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். இந்த செட்டிநாடு முட்டை மசாலா சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். மேலும் இதை செய்வது மிகவும் சுலபம்.

உங்களுக்கு செட்டிநாடு முட்டை மசாலா எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு முட்டை மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முட்டை - 4
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 2 (அரைத்துக் கொள்ளவும்)
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* மல்லி - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* சீரகம் - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
செய்முறை:
* முதலில் முட்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதன் ஓடுகளை நீக்கிவிட்டு, முட்டைகளில் ஆங்காங்கு கீறி விட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மல்லி விதைகள், மிளகு, வரமிளகாய், சீரகம், சோம்பு, பட்டை சேர்த்து 3 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைத்து, பின் மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* பிறகு அதில் கடுகு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் மூடி வைத்து 5 நிமிடம் வெங்காயத்தை மென்மையாக வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, வேக வைத்த முட்டைகளை சேர்த்து கிளறி, மூடி வைத்து 10 நிமிடம் நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு முட்டை மசாலா தயார்.



Click it and Unblock the Notifications
