Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
எப்பவும் ஒரே மாதிரி சிக்கன் கிரேவி செய்யாம.. ஒருவாட்டி இந்த பக்குவத்துல செய்யுங்க.. டேஸ்ட் அள்ளும்...
Chettinad Chicken Gravy Recipe In Tamil: இந்த வார விடுமுறையில் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கி சமைக்கப் போகிறீர்களா? அதுவும் காலையில் பூரி செய்து சிக்கன் கிரேவி செய்து சாப்பிட திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் ஒரே மாதிரி சிக்கன் கிரேவியை செய்யாமல், ஒருமுறை செட்டிநாடு ஸ்டைலில் சிக்கன் கிரேவியை செய்யிங்கள்.
இந்த சிக்கன் கிரேவி பூரி, சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த மாதிரி சிக்கன் கிரேவியை செய்தால், பின் உங்கள் வீட்டில் உள்ளோர் எப்போதும் இந்த மாதிரி தான் சிக்கன் கிரேவியை செய்ய சொல்வார்கள். இன்று உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்த நினைத்தால், இந்த கிரேவியை செய்து கொடுங்கள்.

உங்களுக்கு செட்டிநாடு சிக்கன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பட்டை - 2
* கிராம்பு - 4
* ஏலக்காய் - 1
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - சிறிது
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* காஷ்மீரி வரமிளகாய் - 3
* கசகசா - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5
* பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தண்ணீர் - சிறிது
கிரேவிக்கு...
* நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 200 கிராம் (அரைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* சிக்கன் - 1 கிலோ
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தக்காளி - 1 (நறுக்கியது)
* கெட்டி தேங்காய் பால் - 1/2 கப்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 2 கொத்து
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி ,
பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு, சீரகம்,
மல்லி, வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய், கசகசா ஆகியவற்றை சேர்த்து நல்ல
மணம் வரும் வரை வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் முந்திரி, பொட்டுக்கடலை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அதன் பின் அரைத்த சின்ன வெங்காயத்தை சேர்த்து நிறம் மாற வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* பின் அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நிறம் மாற வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி
விட வேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, நீர் ஊற்றாமல் நன்கு
மசாலா சிக்கனுடன் ஒன்று சேரும் வரை கிளறி விட வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் கெட்டி தேங்காய் பாலை
ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து மூடி வைத்து, மீண்டும் 5 நிமிடம்
வேக வைத்தால், சிக்கன் நன்கு வெந்துவிடும்.
* பின் அதில் மிளகுத் தூள் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, கிரேவியுடன் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவினால்,
சுவையான செட்டிநாடு சிக்கன் கிரேவி தயார்.
குறிப்பு: இந்த சிக்கன் கிரேவிக்கு அதிகம் நீர் ஊற்ற வேண்டியிருக்காது. சிக்கனில் இருந்தே போதுமான நீர் வெளிவரும். ஒருவேளை போதாமல் இருந்தால் மட்டும் நீர் ஊற்றினால் போதுமானது.



Click it and Unblock the Notifications











