Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
மணமணக்கும் சுவையான... செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட்
நீங்கள் சிக்கன் பிரியரா? அடிக்கடி சிக்கனை சமைத்து சாப்பிடுவீர்களா? உங்களுக்கு செட்டிநாடு சிக்கன் ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? அப்படியானால் செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் செய்து சாப்பிடுங்கள்.
நீங்கள் சிக்கன் பிரியரா? அடிக்கடி சிக்கனை சமைத்து சாப்பிடுவீர்களா? உங்களுக்கு செட்டிநாடு சிக்கன் ரெசிபிக்கள் ரொம்ப பிடிக்குமா? அவற்றை வீட்டில் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் செய்து சாப்பிடுங்கள். இந்த சிக்கன் நெய் ரோஸ்ட் சாதத்திற்கு ஒரு அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும். இன்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்றதும் என்ன சமைப்பது என்று யோசித்தால், ரசம் சாதம் வைத்து, செட்டிநாடு நெய் ரோஸ்ட் செய்து சாப்பிடுங்கள். சும்மா அல்லும்.

உங்களுக்கு செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 கிலோ
செட்டிநாடு மசாலாவிற்கு...
* காஷ்மீரி வர மிளகாய் - 10
* வரமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
ஊற வைப்பதற்கு...
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* தயிர் - 4 டேபிள் ஸ்பூன்
பிற பொருட்கள்...
* நெய்/வெண்ணெய் - 1/4 கப்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முதலில் காஷ்மீரி வரமிளகாயை சேர்த்து சிறிது நேரம் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் செட்டிநாடு மசாலாவிற்கு கொடுத்துள்ள மற்ற பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து, நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த பொருட்களை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், எலுமிச்சை சாறு சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து கழுவிய சிக்கனில் அரைத்த செட்டிநாடு மசாலா, தயிர், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிரட்டி, குறைந்தது 1 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் நெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் வைத்து 15-20 நிமிடம் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். சிக்கன் வேகும் போது அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளறி விடுங்கள்.
* சிக்கனின் மேற்புறம் நன்கு மொறுமொறுப்பான பதத்திற்கு வந்ததும், அதன் மேல் சிறிது கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால், செட்டிநாடு சிக்கன் நெய் ரோஸ்ட் தயார்...
Image Courtesy: steffisrecipes



Click it and Unblock the Notifications