Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
தேங்காய் சட்னி சீக்கிரம் கெட்டுப் போகாம இருக்கணுமா? அப்ப இந்த செஃப் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..
Food Hacks In Tamil: தற்போது ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்றில் சமையலும் ஒன்று. சமையலை தெரிந்து வைத்துக் கொண்டால், எந்த இடத்தில் இருந்தாலும், தங்களுக்கு வேண்டியதை சூப்பராக சமைத்து சாப்பிடலாம். சமையல் என்பது ஒரு கலை.
இந்த சமையலை மனதார நேசித்து சமைக்கும் போது, அந்த சமையலின் ருசியே வேற லெவலில் இருக்கும். ஆனால் சமைக்கும் போது நாம் நம்மை அறியாலேயே ஒருசில தவறுகளை செய்துவிட்டு, அதை எப்படி சரிசெய்வது என்பது தெரியாமல் இருப்போம்.

இப்படிப்பட்டவர்களுக்காகவே பிரபல செஃப் ஷான்ஜித் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இல்லத்தரசிகளுக்கும், பேச்சுலர்களுக்கும் பல்வேறு உணவு ஹேக்குகளை பகிர்ந்து வருகிறார். அதுவும் சமைக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான 6 உணவு ஹேக்குகளை குறித்து பகிர்ந்துள்ளார். அவை பின்வருமாறு:
1. நீங்கள் சமைக்கும் வெண் பொங்கல் எப்போதும் கெட்டியாக உள்ளதா? அப்படியானால் தாளிக்கும் போது அதிகமாக நெய் சேர்க்காமல், எண்ணெயிலேயே பொங்கலை தாளிக்கவும். இதனால் பொங்கல் மென்மையாக இருக்கும். முக்கியமாக கடைசியாக சிறிது நெய் மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
2. இடியாப்பம் எப்போதும் மென்மையா இருக்கணுமா? இடியாப்ப மாவை அரைத்த பின் அதை ஒரு துணியில் கட்டி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வையுங்கள். மாவு நன்கு வெந்ததும், அதை வெளியே எடுத்து மாவை பிசைந்தால், இடியாப்பம் எப்போதும் மென்மையாக இருக்கும்.
3. பஜ்ஜி எப்போதும் மொறுமொறுவென்று இருக்கணுமா? 3 கப் கடலை மாவுக்கு 1 கப் அரிசி மாவு மற்றும் சிறிது மைதா சேர்த்து, அத்துடன் சிறிது சூடான வெண்ணெயை சேர்த்து பிசைந்தால், அந்த பஜ்ஜி நன்கு ஜொலிப்பதோடு, நீண்ட நேரம் மொறுமொறுவென்றும் இருக்கும்.
4. தேங்காய் சட்னி சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருக்கணுமா? அப்படியானால் அத்துடன் சிறிது புளியை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். புளியை சேர்த்து அரைத்தால், சட்னி சற்று நீண்ட நேரம் நன்றாக இருக்கும். ஆனால் அதில் கையை வைத்துவிடாதீர்கள்.
5. தயிரை செட் பண்ணும் போது, நிறைய பேர் செய்யும் ஒரு தவறு என்றால், பால் சூடாக இருக்கும் போதே அந்த உரையை போட்டு கலந்து வைப்பது தான். மிதமான சூட்டில் 1 டேபிள் ஸ்பூன் தயிர் உரையை ஊற்றி, நன்கு கலந்துவிட்டு, வடிகட்டி ஒரு இடத்தில் 4 மணிநேரம் அசையாமல் வைத்து எடுத்தால், தயிர் அருமையாக செட்டாகிவிடும்.
6. வீட்டில் அரைத்து வைக்கும் இஞ்சி பூண்டு பேஸ்ட் விரைவில் நிறம் மாறிவிடுகிறதா? எப்போதும் பூண்டு பற்களை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்துவிட்டு, பின் அரைக்காதீர்கள். இப்படி செய்யும் போது சீக்கிரம் நிறம் மாறிவிடும். மேலும் இஞ்சி மற்றும் பூண்டு பற்களை பொடியாக நறுக்கி, பின் அரைத்தால், நிறம் சீக்கிரம் மாறாது. கடைசியாக, அரைத்த இஞ்சி பூண்டு பேஸ்ட்டை மைக்ரோ ஓவனில் ஒரு 6 நிமிடம் வைத்து எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்தால், 1 மாதமானாலும் கெட்டுப்போகாது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள செஃப் ஷான்ஜித் அவர்களின் உணவு ஹேக்குகள் அனைத்தும் நிச்சயம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை உங்களுக்கு இந்த விஷயங்கள் தெரியாமல் இருந்தால், இனிமேல் தெரிந்து அதைப் பின்பற்றி நன்மை பெறுங்கள்.



Click it and Unblock the Notifications
