Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சீஸ் பூரி
உங்கள் வீட்டில் கோதுமை மாவு மற்றும் சீஸ் இருக்கிறதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான சீஸ் பூரி செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளோருக்கும் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் கோதுமை மாவு மற்றும் சீஸ் இருக்கிறதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான சீஸ் பூரி செய்து கொடுங்கள். இந்த சீஸ் பூரியை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போதும் செய்து கொடுக்கலாம். இதனால் அவர்களிடம் பாராட்டைப் பெறலாம்.

உங்களுக்கு சீஸ் பூரி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சீஸ் பூரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பூரி மாவிற்கு...
* கோதுமை மாவு - 1 கப்
* ரவை - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
* சீஸ் - 1 கப் (துருவியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* ஒரு பௌலில் கோதுமை மாவு, ரவை, உப்பு, 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அந்த மாவை ஈரத் துணியால் மூடி 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு உள்ளே வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் ஒரு பௌலில் போட்டு நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு சிறிது மாவை எடுத்து உருட்டி, அதை சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே சிறிது சீஸ் கலவையை வைத்து மூட வேண்டும்.
* பின் அதை மீண்டும் தட்டையாக பூரி அளவிற்கு தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சீஸ் பூரி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications