Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
Cheese Dosa Recipe : சீஸ் தோசை
உங்கள் குழந்தைகள் சீஸை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியென்றால் அவர்களுக்கு சீஸ் தோசை செய்து கொடுங்கள். இந்த சீஸ் தோசை மிகவும் சுவையாக இருக்கும்.
உங்கள் குழந்தைகள் சரியாக சாப்பிடுவதே கிடையாதா? என்ன செய்து கொடுத்தாலும், வேண்டாம் என்று சொல்கிறார்களா? உங்கள் குழந்தைகள் சீஸை விரும்பி சாப்பிடுவார்களா? அப்படியென்றால் அவர்களுக்கு சீஸ் தோசை செய்து கொடுங்கள். இந்த சீஸ் தோசை மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் செய்வதும் சுலபம். முக்கியமாக இதற்கு எந்த சைடு டிஷ்ஷும் தேவைப்படாது.

உங்களுக்கு சீஸ் தோசை எப்படி செய்வதென்று தெரிந்து கெள்ள வேண்டுமா? கீழே சீஸ் தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தோசை மாவு - தேவையான அளவு
* தக்காளி கெட்சப் அல்லது தக்காளி சாஸ் - தேவையான அளவு
* மொசரெல்லா சீஸ் - தேவையான அளவு (துருவியது)
* எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும்.
* தோசைக்கல் சூடானதும், ஒரு கரண்டி தோசை மாவை சூடான கல்லில் ஊற்றி மெல்லிய தோசையாக சுட வேண்டும். பின்பு அதன் மேல் எண்ணெய் ஊற்ற வேண்டும்.
* பிறகு தோசையின் மேல் தக்காளி சாஸ் அல்லது தக்காளி கெட்சப்பை வைத்து சமமாக பரப்பி விட வேண்டும்.
* பின்பு அதன் மேல் துருவிய சீஸை தூவி உருக விட வேண்டும். தோசையின் அடிப்பகுதி மொறுமொறுப்பானதும், தோசையை எடுத்தால், மொறுமொறுப்பான சீஸ் தோசை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
