Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
சப்பாத்திக்கு ஒருமுறை இந்த சால்னாவை செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க கணக்கில்லாம சாப்பிடுவாங்க..
Chapathi Salna Recipe In Tamil: இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் வீட்டில் காய்கறிகள் எதுவும் இல்லையா? அப்படியானால் ப்ளைன் கெட்டி சால்னாவை செய்யுங்கள்.
இந்த சால்னாவிற்கு நிறைய பொருட்கள் வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டில் உள்ள ஒருசில பொருட்களே போதுமானது. இந்த சால்னாவை செய்தால், வீடே மணக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு சப்பாத்தி சால்னாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சப்பாத்தி சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கசகசா - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5-7
* தேங்காய் - 2 பெரிய சில்லு (பொடியாக நறுக்கியது)
* சின்ன வெங்காயம் - 6
* சோம்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு....
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* ஏலக்காய் - 2
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 4
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீ1பூன்
* புதினா - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கசகசா மற்றும் முந்திரியை சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய தேங்காய், சின்ன வெங்காயம், சோம்பு
மற்றும் ஊற வைத்துள்ள கசகசா மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு
மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து, தேவையான அளவு
உப்பு சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின்
புதினாவை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
சேர்த்து ஒரு நிமிடம் குறைவான தீயில் வைத்து கிளறி, அரைத்து வைத்துள்ள
மசாலாவை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் சால்னாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 1 விசில்
விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத்
தூவி கிளறினால், சுவையான சப்பாத்தி சால்னா தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications
