Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
சப்பாத்திக்கு சிம்பிளா ஒரு சைடு டிஷ் செய்யணுமா? அப்ப இத செய்யுங்க.. செமயா இருக்கும்..
Chapathi Masala Without Vegetables: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? சிம்பிளா ஏதாவது ஒரு சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெங்காயமும், தக்காளியும் உள்ளதா?
அப்படியானால் அவற்றைக் கொண்டே அருமையான சுவையில் ஒரு மசாலா செய்யலாம். இந்த மசாலா 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருக்கும். இதனால் இது பேச்சுலர்களுக்கும் ஏற்ற அருமையான சைடு டிஷ். வேலைக்கு செல்பவர்கள் இந்த சைடு டிஷ்ஷை தெரிந்து வைத்துக் கொண்டால், டக்கென்று நைட் டின்னரை முடிக்கலாம்.

உங்களுக்கு ப்ளைன் சப்பாத்தி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ப்ளைன் சப்பாத்தி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* வெங்காயம் - 3 (நீளவாக்கில் வெட்டியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (இரண்டாக உடைத்தது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து,
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அத்துடன் பச்சை
மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, வெங்காயம்
நன்கு நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
சேர்த்து மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பிறகு பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, வேண்டுமானால் சிறிது
உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* தக்காளி ஓரளவு வதங்கியதும், அதை மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து
15 நிமிடம் எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
முக்கியமாக அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்து வந்ததும், அதை இறக்கினால்,
சுவையான சப்பாத்தி மசாலா தயார்.



Click it and Unblock the Notifications