Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
காலிஃப்ளவரை இப்படி புதுவிதமா பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
Cauliflower Poriyal Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? எப்போது காலிஃப்ளவர் வாங்கினாலும், எண்ணெயில் பொரித்தோ, குருமாவில் சேர்த்தோ தான் சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை காலிஃப்ளவரை கீழே கொடுக்கப்பட்டுள்ள பக்குவத்தில் பொரியலோ, வறுவலோ செய்யுங்கள்.
இப்படி செய்யும் போது, அது சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். முக்கியமாக இந்த காலிஃப்ளவர் பொரியல் செய்வதென்று மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இந்த மாதிரி காலிஃப்ளவரை செய்யும் போது, காலிஃப்ளவர் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு காலிஃப்ளவர் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* பூண்டு - 8 பல்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* தேங்காய் - 1/4 கப்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்
* காலிஃப்ளவர் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 1/2 டம்ளர்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில்
சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து, நீர் கொதிக்க
ஆரம்பித்ததும், துண்டுகளாக்கப்பட்ட காலிஃப்ளவரை சேர்த்து 1 நிமிடம்
வேக வைத்து, எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் பூண்டு, சோம்பு, தேங்காய், மிளகாய் தூள்
சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து, நிறம்
மாற லேசா வதக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி
பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
* அதன் பின், அதில் காலிஃப்ளவரை சேர்த்து நன்கு கிளறி, 1/2 டம்ளர்
நீரை ஊற்றி நன்கு பிரட்டி விட வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து 5-7 நிமிடம் வேக வைக்க வேண்டும். அப்படி வேக
வைக்கும் போது, அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறி விட வேண்டும்.
* காலிஃப்ளவர் நன்கு வெந்துவிட்டால், அதில் கொத்தமல்லியைத் தூவி
பிரட்டி இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் பொரியல் தயார்.



Click it and Unblock the Notifications