Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
காலிஃப்ளவரும் பட்டாணியும் வெச்சு.. ஒருடைம் கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு செம சூப்பரா இருக்கும்..
Cauliflower Peas Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? எப்போதும் உருளைக்கிழங்கு சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் மற்றும் பட்டாணி இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கிரேவியை செய்யுங்கள்.
இந்த காலிஃப்ளவர் பட்டாணி கிரேவி சப்பாத்தியுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். அதுவும் இந்த கிரேவி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். பேச்சுலர்கள் கூட இதை ட்ரை செய்யலாம்.

உங்களுக்கு காலிஃப்ளவர் பட்டாணி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் பட்டாணி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன காலிஃப்ளவர் - 1
* கல் உப்பு - சிறிது
* சுடுநீர் - 2 கப்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 3
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 1 இன்ச்
* வெங்காயம் - 1 1/2 (நறுக்கியது)
* புதினா - சிறிது
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* முந்திரி - 7-8
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வேக வைத்த பட்டாணி - 1 கப்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை துண்டுகளாக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு,
அதில் சிறிது கல் உப்பு மற்றும் 2 கப் சுடுநீரை ஊற்றி, 2 நிமிடம் ஊற
வைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், காலிஃப்ளவரை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, ஒரு
தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், சீரகம், சோபு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பூண்டு,
இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வறுக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய 1 1/2 வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் புதினாவை
சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி, மென்மையாகும் வரை வதக்கி
இறக்கி, முந்திரியை சேர்த்து கிளறி குளிர வைக்க வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய 1/2 வெங்காயம் மற்றும்
பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் குழம்பு மிளகாய் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா
சேர்த்து குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
தூவி 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் ப்ரை செய்து வைத்துள்ள காலிஃப்ளவரை சேர்த்து நன்கு
கிளறி விட்டு, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கொதிக்க வைக்க
வேண்டும்.
* பின் அதில் வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்து கிளறி, உப்பு சுவை
பார்த்து, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 5 நிமிடம் மூடி வைத்து
வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் கசூரி மெத்தி மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான காலிஃப்ளவர் பட்டாணி கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications