Latest Updates
-
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
சுரைக்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்..
சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும்.. காலிஃப்ளவர் பன்னீர் கிரேவி
Cauliflower Paneer Curry Recipe: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசனை செய்து கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் காலிஃப்ளவர் உள்ளதா? அத்துடன் பன்னீரும் இருந்தால், அட்டகாசமான சுவையில் ஒரு கிரேவியை செய்யலாம்.
இந்த காலிஃப்ளவர் பன்னீர் கிரேவி சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். அதோடு இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு காலிஃப்ளவர் பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காலிஃப்ளவர் பன்னீர் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி - 2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* கறிப்பிலை - சிறிது
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு -1 டீஸ்பூன்
* மஞ்சுள் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காலிஃப்ளவர் - 500 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* தேங்காய் பால் - 150 மிலி
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் காலிஃப்ளவரை கொதிக்கும் சுடுநீரில் போட்டு, 10 நிமிடம்
மூடி வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி
சூடானதும், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து ஒருநிமிடம் வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள்,
மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு காலிஃப்ளவர் சேர்த்து ஒருமுறை கிளறி, 1 கப் நீரை ஊற்றி,
மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* காலிஃப்ளவர் நன்கு வெந்ததும், பன்னீர் துண்டுகளை சேர்த்து குறைவான
தீயில் வைத்து, 5 நிமிடம் வேக வைத்து, இறுதியாக தேங்காய் பாலை
சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான காலிஃப்ளவர்
பன்னீர் கிரேவி தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications